யாழ். நகரப் பாடசாலையில் மாணவர்களுக்கு காசநோய்!

யாழ்ப்பாணம் (Jaffna) நகரத்திலுள்ள ஆண்கள் பாடசாலை மாணவர்கள் சிலருக்கு காசநோய் கண்டறியப்பட்டுள்ளது.

மேற்படி பாடசாலையில் ஒரு வகுப்பில் கல்வி பயிலும் மாணவனுக்கு உடல் மெலிவு ஏற்பட்ட நிலையில் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

அந்த மாணவனுக்குக் காசநோய் அறிகுறி இருப்பது கண்டறியப்பட்ட நிலையில் அவருடன் நெருங்கிப் பழகிய மாணவர்கள் சிலரைப் பரிசோதனைக்கு உட்படுத்திய நிலையில், அவர்களுக்கும் காசநோய் இருப்பது தெரியவந்துள்ளது.