குறைக்கப்படவுள்ள விசிட்டர் வீசா!

கனடா  செல்லும் தற்காலிக குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த திட்டமிட்டுள்ளதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.தற்காலிக விசாவில் நாட்டுக்கு வருவோரின் எண்ணிக்கை குறைக்கப்படும் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

2017 ஆம் ஆண்டு கனடாவின் மக்கள் தொகையில் 2 சதவீதமானவர்களே தற்காலிக குடியேறியவர்களாகும்.கனேடிய மக்கள் தொகையில் 7.5 சதவீதம் பேர் தற்காலிகமாக குடியேறியவர்களாகும்.இது நாம் மீண்டும் கட்டுப்பாட்டிற்குள் வர வேண்டிய ஒன்றென பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

கடந்த வருடத்தில் விசிட்டர் விசாவில் இலங்கையர்கள் உட்பட பெருந்தொகையான வெளிநாட்டவர்கள் கனடாவுக்குள் உள்வாங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.