உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் இந்தியாவே செயற்பட்டதாக முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேனவாக்குமூலம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) அழைக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போதே அவர் இந்த வாக்குமூலத்தை வழங்கியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, 2019ஆம் ஆண்டு மைத்திரிபால சிறிசேன சிறிலங்கா அதிபராக பதவி வகித்த போதே உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் நடத்தப்பட்டன.அண்மையில் கண்டிக்கு பயணம் செய்திருந்த அவர், உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களில் யார் சம்பந்தப்பட்டிருந்தனர் என்பது தொடர்பில் தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்திருந்தார்.
Leave a Reply