நீர்கொழும்பு தேவாலயமொன்றின் நுழைவாயிலுக்கு அருகில் இரண்டு கத்திகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த கைது நடவடிக்கையானது, இன்றைய தினம் ஈஸ்டர் ஞாயிறு தின நிகழ்வுகளின் போது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஈஸ்டர் ஆராதனைக்கு வந்திருந்த ஒரு குழுவினருக்கு இவர் மீது சந்தேகம் ஏற்பட்டு அவர் தொடர்பில் கடமையிலிருந்த காவல்துறை புலனாய்வு அதிகாரிக்கு தெரியப்படுத்தியதையடுத்து சந்தேகத்தின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதன்போது, மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பகுதியை சேர்ந்த நாற்பத்து மூன்று வயதான கந்தசாமி வாகனநாயகம் என்ற சந்தேகநபரே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு தலைமையக காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
Leave a Reply