இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள விடயங்களை கண்டுபிடிப்பதற்கான முக்கிய தடையாக முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவே காணப்படுகின்றார் என கத்தோலிக்க திருச்சபையின் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியிலேயே அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று பலமாதங்களின் பின்னர் அதிபரான கோட்டாபய ராஜபக்ச எடுத்த முதல் நடவடிக்கை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை செயல் இழக்கச்செய்ததே என அவர் சுட்டிக்காட்டினார்.
Leave a Reply