வாழ விடுங்கள் ரொபர்ட் பயஸ் கடிதம் !

எவ்வித பாதுகாப்பு அச்சுறுத்தலும் இன்றி சக மனிதனைப் போல வாழ விரும்புவதாகவும் அதற்கு தாங்கள் முழு ஒத்தழைப்பினை நல்குமாறும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கு மறைந்த பாரதப் பிரதமர் ராஜீவ்காந்தியின் கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட ரொபர்ட் பயஸ் தெரிவித்துள்ளார்.

அந்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“நீண்ட சிறைவாசத்திற்கு பிறகு உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டு கடந்த 12-11-2022 முதல் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதற்காக சிறப்பு முகாமில் ஒன்றரை வருடங்களாக தங்ககவக்கப்பட்டு உள்ளோம்.

எஞ்சியிருக்கும் இறுதி காலத்தையாவது இழந்துபோன வாழ்க்கையின் எஞ்சிய நம்பிக்கையில் மனைவி பிள்ளைகளோடும், பேரக் குழந்தைகளோடும், சகோதர சகோதரிகள் மற்றும் இதர உறவினர்களோடு கழிக்கலாம் என எண்ணியிருந்தோம்.

இத்தனைக் காலமும் தமிழ் மக்கள் உளப்பூர்வமாக எங்களுக்கு பல்வேறு வழிகளில் உறுதுணையாக இருந்துள்ளார்கள். எங்கள் வாழ்வில் எட்டாக் கனியாக இருந்த விடுதலை வாழ்வு இன்று கைக்கெட்டும் தூரத்தில் இருக்கிறது” – என்றுள்ளது.


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *