மகிந்த வீட்டில் அடிதடி !

முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச வீட்டில் இடம்பெற்ற ஒன்றுகூடலின் போது மோதல் நிலைமை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் விசேட கூட்டத்தின் போது ஏற்பட்ட முரண்பாடு காரணமாக அங்கு பரபரப்பு நிலை ஏற்பட்டுள்ளது.

அமைச்சர் காஞ்சன விஜேசேகரவுக்கும் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவின் ஆலோசகர் எரந்த கினிக்கும் இடையில் மோதல் நிலைமை ஏற்பட்டுள்ளது.

ரணிலின் பிள்ளைகள் போல் செயற்படுவதாக காஞ்சனவை நகைச்சுவையாக எரந்த கினிகே சாடிய நிலையில் கோபமடைந்த அமைச்சர் அவரை தாக்க முயன்றதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த ஒன்றுகூடலின் போது அமைச்சர்களான காஞ்சன விஜேசசேகர, பிரசன்ன ரணதுங்க, பிரமித்த பண்டார தென்னக்கோன், நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அலுத்கமகே உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

 


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *