Tag: #srilankannews
-
வடமாகாண ஆளுநர் அலுவலகம் முன் போராட்டம்!
யாழ்ப்பாணம் சாவகச்சேரி பிரதேச சபைக்குட்பட்ட மீசாலை வடக்கு தட்டாங்குளம் வீதியினை புனரமைத்து தருமாறு கோரி அப்பகுதி மக்கள் இன்றைய தினம் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டடனர். வடமாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் குறித்த வீதியினை பயன்படுத்தும் 5 கிராமசேவகர் பிரிவுகளை சேர்ந்த மக்கள் கலந்துகொண்டிருந்தனர். ஐந்து வருடங்களாக புனரமைக்கப்படாத இந்த வீதியால் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பயன்படுத்துகின்ற போதிலும் மிக மோசமான நிலையில் வீதி பாதிக்கப்பட்டுள்ளதாக போராட்டக்காரர்கள் தெரவிக்கின்றனர். ஆர்ப்பாட்டத்தின் இறுதியில்…
-
இடைத் தேர்தலில் லிபரல் கட்சி தோல்வி!
டொரன்டோவின் சென் போல்ஸ் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி வெற்றியீட்டியுள்ளது. லிபரல் கட்சியின் வலுவான தொகுதியாக கருதப்பட்டு வந்த இந்த தொகுதியில் கன்சர்வேட்டிவ் கட்சி வெற்றியை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. கன்சர்வேட்டிவ் கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிட்ட டொன் ஸ்டுவர்ட் இந்த தேர்தலில் வெற்றி ஈட்டியுள்ளார். டொரன்டோவின் சென்ட் பால்ஸ் தொகுதியில் இவ்வாறு ஸ்டுவர்ட் வெற்றியை பதிவு செய்துள்ளார். கடுமையான போட்டிக்கு மத்தியில் கான்சர்வேட்டிவ் கட்சியின் வேட்பாளர் ஸ்டுவர்ட் 590 மேலதிக வாக்குகளின் வெற்றியை பதிவு…
-
வயோதிப சனத்தொகையில் ஏற்படவுள்ள மாற்றம்!
கனடாவில் வயோதிபராசனத்தொகை அதிகரிக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.எதிர்வரும் 2073 ஆம் ஆண்டளவில் கனடாவின் மொத்த சனத்தொகை 63 மில்லியனை எட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.கனடிய புள்ளி விபரவியல் திணைக்களம் இது தொடர்பான எதிர்வு கூறல்களை வெளியிட்டுள்ளது. 85 வயதிற்கும் மேற்பட்ட கனடியர்களின் எண்ணிக்கை வெகுவாக உயர்வடையும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.இதன் படி 2073 ஆம் ஆண்டில் கனடாவில் 85 வயதிற்கும் மேற்பட்ட வயோதிபர்களின் மொத்த எண்ணிக்கை 3.3 ஆக உயர்வடையும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
-
யாழில். மாணவிக்கு மோட்டார் சைக்கிள் கற்றுக்கொடுப்பதாக சேட்டை புரிந்தவர் கைது!
பாடசாலை மாணவிக்கு மோட்டார் சைக்கிள் ஓட கற்றுதருவதாக கூறி பாலியல் சேட்டை புரிந்த 44 வயதான, முச்சக்கர வண்டி சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தை சேர்ந்த மாணவி ஒருவரை அவரது கல்வி நடவடிக்கைக்காக ஏற்றி இறக்கும் சேவைக்காக முச்சக்கர வண்டி சாரதி ஒருவரை மாணவியின் பெற்றோர் வாடகைக்கு அமர்த்தி இருந்தனர். அந்நிலையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை , தனது முச்சக்கர வண்டி திடீரென பழுதடைந்து விட்டதாகவும் , அதனால் தனது மோட்டார் சைக்கிளில் மாணவியை…
-
யாழில். வீடுடைத்து நகைகள் கொள்ளை!
யாழ்ப்பாணத்தில் வீடுடைத்து 09 பவுண் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. அச்சுவேலி பத்தமேனி பகுதியில் உள்ள வீடொன்றில் வசிக்கும் வீட்டார் , வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்ற சமயம் , வீட்டின் கதவினை உடைத்து உள்நுழைந்த கொள்ளையர்கள் வீட்டில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 09 பவுண் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். வீட்டார் வீடு திரும்பிய போதே , வீட்டின் கதவு உடைக்கப்பட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட விடயம் தெரிய வந்துள்ளது. அது தொடர்பில் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த…
-
இந்திய மீனவர்களின் தாக்குதலில் கடற்படை சிப்பாய் உயிரிழப்பு!
யாழ்ப்பாணத்தில் , இந்திய மீனவர்களின் தாக்குதலுக்கு இலக்கான கடற்படை சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். காங்கேசன்துறை கடற்படை முகாமில் கடமையாற்றும் ரத்நாயக்க எனும் கடற்படை வீரரே உயிரிழந்துள்ளார். காங்கேசன்துறை கடற்படை முகாமை சேர்ந்த கடற்படையினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அதிகாலை கடலில் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அதன் போது நெடுந்தீவு கடற்பரப்பை அண்டிய பகுதியில் படகொன்றில் அத்துமீறி நுழைந்து இந்திய மீனவர்கள் கடற்தொழிலில் ஈடுபட்டுள்ளதை , அவதானித்து , அவர்களை கைது செய்ய முயன்றுள்ளனர். அதன் போது…
-
யாழில். மிக்சருக்குள் பொரித்த பல்லி!
யாழ்ப்பாணம் செல்வ சந்நிதி ஆலய சூழலில் விற்கப்பட்ட மிக்ஸருக்கு பொரித்த நிலையில் பல்லி ஒன்று காணப்பட்டுள்ளது. சந்நிதி ஆலயத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை இரவு , ஆனிப்பொங்கல் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. அதன் போது ஆலயத்திற்கு பெருமளவான பக்தர்கள் வருகை தந்திருந்தனர். அந்நிலையில் ஆலயத்திற்கு வருகை தந்த ஒருவர் , ஆலய சூழலில் உள்ள இனிப்பு கடை ஒன்றில் மிக்ஸரை வாங்கிய போது , அதனுள் பொரித்த நிலையில் பல்லி ஒன்று காணப்பட்டுள்ளது. அது…
-
நெடுந்தீவில் இளைஞன் படுகொலை!
யாழ்ப்பாணம் – நெடுந்தீவு ஏழாம் வட்டார பகுதியில் இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். நெடுந்தீவு 07 வட்டாரத்தைச் சமக்கீன் தேவராஜ் அருள்ராஜ் என்ற 23 வயதானவரே கொலை செய்யப்பட்டார். இருவருக்கிடையே காணப்பட்ட முற்பகை காரணமாக நேற்றைய தினம் புதன்கிழமை இரவு மது போதையில் வாய்தர்க்கம் இடம் பெற்றதாகவும் அதன் பின்னர் குறித்த கொலை இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக நெடுந்தீவு வைத்தியசாலையில், ஒப்படைக்கப்பட்டுள்ளது. கொலையுடன் சம்பந்தப்பட்டவர்கள் என சந்தேகிக்கப்படும் சந்தேக…
-
யாழில் ஐவர் கைது!
யாழ்ப்பாணம் – குருநகரில் பொலிஸார் நடாத்திய விசேட சுற்றிவளைப்பு சோதனையின்போது ஜவர் கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணப் பிராந்திய பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கமைய குறித்த கைது நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டது. பொசன் தினத்தில் அரச மதுபானங்களை விற்பனை செய்த குற்றச்சாட்டில் ஒருவரும் ஹெரோயின் போதைப் பொருளுடன் இருவரும், கஞ்சா கலந்த மாவாவுடன் இருவரும் கைது செய்யப்பட்டனர். இதன்போது 19 சாராய கால் போத்தல்கள், 70 மில்லிகிராம் ஹெரோயின், 80 கிராம் கஞ்சா கலந்த மாவா…
-
யாழ். கல்லுண்டாயில் போராட்டம்!
கல்லுண்டை பகுதி மக்கள் அவர்களது குடியேற்ற திட்டத்திற்கு அருகாமையில், இன்றைய தினம் வெள்ளிக்கிழமை கவனஈர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவிக்கையில், கல்லூண்டாய் குடியேற்றத்திட்ட பகுதியில் ஜே/135, ஜே/136 என இரண்டு கிராம சேவகர் பிரிவுகள் உள்ளன. ஆனால் மொத்தமாக 88 குடும்பங்கள் தான் வசிக்கின்றன. ஜே/135 கிராம சேவகர் பிரிவில் சுமார் 27 குடும்பங்கள் தான் உள்ளன. ஏனையோர் ஜே/136 கிராம சேவகர் பிரிவில் தான் உள்ளனர். இரண்டு கிராமங்களையும் பிரிப்பதற்கு,…