Tag: #srilankanews#eelamurasu
-
கிளப் வசந்தவின் மனைவியின் நிலைமை கவலைக்கிடம் – மலர் வலையம் அனுப்பிய மர்ம நபர்கள் – பொலிஸார் குவிப்பு
அத்துருகிரியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு தாக்குதலில் உயிரிழந்த சுரேந்திர வசந்த பெரேரா எனப்படும் கிளப் வசந்தாவின் மனைவி நிலைமை கவலைக்கிடமாக உள்ளதென களுபோவில வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் கிளப் வசந்தவின் மனைவிக்கு அடையாளம் தெரியாத நபர் மலர் வலையம் ஒன்றை மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து வைத்தியசாலையை சுற்றி விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. துப்பாக்கிச் சூட்டின் போது எட்டு தோட்டாக்கள் அவரது உடலில் பாய்ந்துள்ளதாகவும், அவை அறுவை சிகிச்சை மூலம்…
-
பாரியளவிலான உலை எண்ணெய் மோசடி சிக்கியது!
கெரவலபிட்டிய – யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தில் மின் உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் உலை எண்ணெய் திருடப்பட்டு, அவற்றை வேறு நிறுவனங்களுக்கு விற்கும் மோசடியொன்றை சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. கொலன்னாவ பெற்றோலிய சேமிப்பு முனையத்தின் புலனாய்வுப் பிரிவு நேற்று இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளது. இந்தச் சுற்றிவளைப்பின் போது, திருடப்பட்ட 33,000 லீற்றர் உலை எண்ணெயுடன் பவுசர் வாகனம் மற்றும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் நிர்மாணிக்கப்பட்ட இரண்டாவது பெரிய அனல் மின் நிலையமான கெரவலப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையம்…