Tag: #priddan#eelamurasu#woldnews

  • இலங்கையர்கள் உள்ளிட்டவர்களுடன் பிரித்தானியா நோக்கி சென்ற படகு கடலில் மூழ்கி விபத்து – ஒருவர் மரணம்

    பிரித்தானியா நோக்கி சென்ற சொகுசு படகொன்று கடலில் மூழ்கி விபத்துள்ளானதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளனர். விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், ஆறு பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இத்தாலியின் சிசிலி தீவில் ஏற்பட்ட சூறாவளி காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த படகில் இலங்கையர்கள் உட்பட 22 வெளிநாட்டவர்கள் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்தின் போது, படகில் பயணித்த பிரித்தானியர்கள் மற்றும் அமெரிக்கர்கள் உட்பட 06 பேர் காணாமல் போயுள்ளனர் என செய்திகள் தெரிவிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது