Tag: #maitthibalasisena#srilankanews
-
தேர்தலில் போட்டியிடுவது குறித்து மைத்திரி வெளியிட்ட தகவல் – செய்தி வெளியானது
எதிர்காலத்தில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலிலோ, பொதுத் தேர்தலிலோ தான் போட்டியிடப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கடந்த 2015 ஆம் ஆண்டு பதவியேற்றதை தொடர்ந்து, நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் தான் இந்த விடயத்தை ஏற்கனவே குறிப்பிட்டுள்ளதாக கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போது மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். இலங்கையில் நடைபெறும் தேர்தல்களில் தான் வேட்பாளராக களமிறங்காவிட்டாலும் அரசியலில் இருந்து ஓய்வு பெறப்போவதில்லை என குறிப்பிட்டுள்ளார். இதன்படி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பான…