Tag: #jappan#eelamurasunews#woldnews

  • ஜப்பானில் சக்தி வாய்ந்த நில அதிர்வு

    ஜப்பானில் சக்தி வாய்ந்த நில அதிர்வு ஒன்று உணரப்பட்டுள்ளது. இந்த நில அதிர்வானது மேற்கு ஒகசவாரா தீவுகளில் இன்று காலை 5.02 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 6.3 மெக்னிடியூட்டாக பதிவாகியுள்ளது. மேற்கு ஒகசவாரா தீவுகளுக்கு அப்பால் 530 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நில அதிர்வினால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த நில அதிர்வினால் ஏற்பட்ட உயிர் மற்றும் பொருட்சேதங்கள் தொடர்பில் விபரங்கள் ஏதும் வெளியாகவில்லை என்றும் கூறப்படுகின்றது. என்பது குறிப்பிடத்தக்கது