Tag: #eelamurasu#woldnews #wold

  • கனடிய பசுமைக் கட்சியின் இணைத் தலைவர் ராஜினாமா

    கனடிய பசுமைக் கட்சியின் இணைத் தலைவர் ஜொனதன் பெட்னிலன்ட் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஜொனதன், கட்சியின் மற்றுமொரு இணைத் தலைவரான எலிசபெத் மேயுடன் இணைந்து இந்தப் பதவியை வகித்து வந்தார். தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகுவதாக ஜொனதன் அறிவித்துள்ளார். எலிசெபத் மே மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மைக் மோரிஸ் ஆகியோருடன் இணைந்து செயற்பட்டதனை கௌரவமாக கருதுவதாகத் தெரிவித்துள்ளார். கட்சியை மறுசீரமைப்பதற்கு பங்களிப்பு வழங்கியமை மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்துள்ளார். இதேவேளை, ஜொனதனின் தீர்மானம் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும்…

  • கனடாவில் ஒரே நாளில் பாரியளவு உணவு பொருள் சேகரித்த உணவு வங்கி

    கனடாவில் ஒரே நாளில் பெருந்தொகை உணவுப் பொருட்கள் நன்கொடையாக சேகரிக்கப்பட்டுள்ளது. சர்ரே பகுதியில் அமைந்துள்ள குரு நானாக் உணவு வங்கி இவ்வாறு பாரியளவு உணவுப் பொருட்களை திரட்டியுள்ளது. நான்காம் ஆண்டு நிறைவினை முன்னிட்டு இவ்வாறு உணவுப் பொருட்கள் திரட்டப்பட்டுள்ளன. ஒரே நாளில் குறித்த உணவு வங்கி 384.5 தொன் எடையுடைய உணவுப் பொருட்களை திரட்டியுள்ளது. வட அமெரிக்காவில் இவ்வாறு ஒரே நாளில் அதிகளவில் உணவுப் பொருட்கள் திரட்டப்பட்ட முதல் சந்தர்ப்பமாக இது கருதப்படுகின்றது. சுமார் 11 மணித்தியாலங்களில்…

  • ஸ்காப்ரோவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

    கனடாவின் ஸ்காப்ரோவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். ஸ்காப்ரோவின் வோர்டன் அவன்யூவில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் காயமடைந்த ஆண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறெனினும் காயமடைந்த குறித்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தாக்குதல் மேற்கொண்ட நபர் வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது