Tag: #cavakachcher#hospital#eelamurasunews#srilanka

  • அர்ச்சுனா தொடர்பில் கொழும்பு சென்ற பிழையான தகவல்!

    அர்ச்சுனா தொடர்பில் கொழும்பு சென்ற பிழையான தகவல்! யாழ்ப்பாணத்தில் நடைபெறும் விடயங்கள் கொழும்பிலுள்ள மருத்துவ உயர் அதிகாரிகளுக்கு பிழையாக திரிபுப் படுத்தப்பட்டு சொல்லப்படுவதாக வைத்தியர் அர்ச்சுனா(Dr.Archuna) தெரிவித்துள்ளார். மேலும், வடக்கு மாகாணத்தில் பணிபுரியும் வைத்தியர்களான வைத்தியர் சமன் பத்திரணவாக இருக்கட்டும், வைத்தியர் கேதீஸ்வரனாக இருக்கட்டும் வடக்கில் தற்போது நடைபெறும் விடயங்களை பிழையாக தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர். எனது பக்கம் உள்ள பிரச்சினை கொழும்பிலுள்ள அதிகாரிகளுக்கு தெரியாது. முக்கியமாக யாழ்ப்பாணத்தில் நடந்த பிரச்சினை தொடர்பாக இவர்களுக்கு தெளிவான விளக்கம் இல்லை.…

  • சமூக வலைத்தளங்களில் அதிகமாக பேசப்படும் வைத்தியர் அர்ச்சுனா! வெளியகிய குடும்பப் பின்னணி

    இராமநாதன் அர்ச்சுனா.. அண்மைய நாட்களாக ஊடகங்கள் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகமாக பேசப்படும் பெயர். ஒரு வைத்தியரான இவர் சாவகச்சேரி வைத்தியசாலையில் பதில் வைத்திய அத்தியட்சகராக பொறுப்பேற்ற ஒரு சில நாட்களில் வைத்தியசாலை நிர்வாகத்தில் நடந்த ஊழல்கள், குறைபாடுகள் போன்றவற்றை அம்பலப்படுத்தியதன் காரணமாக ஆதரவானதும், எதிரானதுமான பல விமர்சனங்களை சந்தித்தவர்.தமிழனின் துனிச்சலை நிரூபித்தவர் அர்ச்சுனா வைத்தியர் அர்ச்சுனாவின் வெளிப்படுத்தல்களின் பின்னர் குறித்த வைத்தியசாலை தொடர்பில் பொதுமக்களும் கூட பல குறைபாடுகளை வெளியிட்டிருந்தனர். வைத்தியசாலையில்…

  • சாவகச்சேரி வைத்தியசாலையில் நடக்கும் பகல் கொள்ளை ! சிக்கியது மற்றொரு பெரும் ஆதாரம்

    யாழ். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் குருதி பரிசோதனை செய்வதற்கான அனைத்து வசதிகளும் உள்ள நிலையில் தன்னை வைத்தியர்கள் தனியார் வைத்தியசாலையில் குருதி பரிசோதனை செய்யச் சொன்னதாக பாதிக்கப்பட்ட நோயளியொருவர் ஆதங்கத்தை வெளியிட்டுள்ளார். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை முன்பாக நேற்று முன்தினம் தென்மராட்சி மக்களால் மேற்கொள்ளப்பட்ட மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்தின் பின்னர் அவர் இதனை ஆதாரத்துடன் தெரிவித்துள்ளார். இதன்போது பாதிக்கப்பட்ட நோயாளி அதிக பணம் செலவளித்து குறித்த பரிசோதனையினை மேற்கொண்டதாகவும் மேலும் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

  • நான் இறந்தால் இப்படிச் செய்யுங்கள்! வைத்தியர் அர்ச்சுனாவின் மற்றொரு அதிர்ச்சி தகவல்

    நான் இறந்தால் இப்படிச் செய்யுங்கள்! வைத்தியர் அர்ச்சுனாவின் மற்றொரு அதிர்ச்சி தகவல் நான் இறந்தால் கூட வைத்தியசாலையில் எனது விடுதியின் நடுவில் வைத்து எரிக்குமாறு சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில் , யாழ்ப்பாணத்தில் வைத்து பொலிஸார் என்னிடம் யார் உங்களுக்கு பாதுகாப்பு என வினவிய போது, எனது தமிழ் சமூகமும் என்னை…

  • பலத்த பாதுகாப்பின் மத்தியில் வெளியேறிய வைத்தியர் அர்ச்சுனா!

    சாவகச்சேரி வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகரான இராமநாதன் அர்ச்சுனா தற்போது வைத்தியசாலையை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பில் விசேட பேச்சுவார்த்தைக்காக அளிக்கப்பட்டுள்ள நிலையிலும், சுகயீன விடுமுறையின் காரணமாகவும் அவர் வைத்தியசாலையை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரியில் கூடும் பொதுமக்களை அடித்து விரட்ட பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருவதாக போராட்டக்காரர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை வைத்திய பொறுப்பதிகாரி செயற்பட்டு வருவதாக தெரிவித்து அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகி்ன்றன. இன்றைய தினம் குறித்த வைத்திய…

  • யாழ். சாவகச்சேரி மக்கள் போராட்டத்தை குழப்ப சதி

    சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்காக, தென்மராட்சி மக்களால் முன்னெடுக்கவுள்ள போராட்டத்தை குழப்பம் வகையில் வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரை யாழ்ப்பாண பிராந்திக்க சுகாதார பணிப்பாளர் ஆறுமுகம் கேதீஸ்வரன் தூண்டி விட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலையை தீர்த்து வைத்தியசாலையின் செயற்பாடுகளை மீள ஆரம்பிக்க வேண்டும் என தென்மராட்சி மக்களினால் நாளை திங்கட்கிழமை போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த போராட்டத்தை குழப்பும் வகையில் யாழ்ப்பாணத்தில் உள்ள…