Tag: #canadanews

  • பொது வேட்பாளராக களமிறங்கும் ரணில்!

    பொது வேட்பாளராக களமிறங்கும் ரணில்!

    ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக ரணிலைக்(Ranil Wickremesinghe) களமிறக்குவோம் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க(Ravi Karunanayake) தெரிவித்துள்ளார். அண்மையில் கொழும்பில்(Colombo) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது கொள்கைகளை மாற்றியதில்லை. ஆட்சியை இழந்தாலும் தனது கொள்கைகளை கடைப்பிடித்தார்.   பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பவும் நாட்டை இந்த இடத்திற்கு கொண்டு வரவும் உழைத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இம்முறை கட்சி சார்பற்ற…

  • கனடாவில் கைத்தொலைபேசி பாவனையாளர்களுக்கு வெளியான அறிவிப்பு!

    கனடாவில் கைத்தொலைபேசி பாவனையாளர்களுக்கு வெளியான அறிவிப்பு!

    கனடாவில் (Canada) ஐ-போன் (iphone) பயன்படுத்துபவர்கள் நட்டஈட்டுத் தொகையை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐபோன் 6  (iphone 6) மற்றும் ஐ-போன் 7 (iphone 7) ஆகியவற்றை பயன்படுத்துவோருக்கு இவ்வாறு 150 டொலர்கள் வரையில் நட்டஈடு பெற முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.குறித்த தீர்ப்பானது பிரிட்டிஸ் கொலம்பியாவின் உச்ச நீதிமன்றினால் வழங்கப்பட்டுள்ளது.

  • சீனா மீது பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ள கனடா!

    சீனா மீது பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ள கனடா!

    கனடாவின்(Canada) உள்ளக அரசியல் விவகாரங்களில் சீனா தலையிடுவதாக ட்ரூடோ(Justin Trudeau) அரசு நிர்வாகம் குற்றம் சுமத்தியுள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தானை தங்கள் உள் விவகாரங்களில் தலையிடுவதாக குற்றம் சாட்டிவந்த கனடா, தனது குற்றச்சாட்டை சீனாவின் பக்கம் திருப்பியுள்ளது. கனடாவின் உளவுத்துறை முகவர்கள், 2019 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் கனடாவில் நடைபெற்ற தேர்தல்களில் தலையிட்டிருக்கக்கூடும் என முதலில் இந்தியா மீதும் பின்னர் பாகிஸ்தான் மீதும் குற்றம் சுமத்தியுள்ளது.

  • யாழ். நகரப் பாடசாலையில் மாணவர்களுக்கு காசநோய்!

    யாழ். நகரப் பாடசாலையில் மாணவர்களுக்கு காசநோய்!

    யாழ்ப்பாணம் (Jaffna) நகரத்திலுள்ள ஆண்கள் பாடசாலை மாணவர்கள் சிலருக்கு காசநோய் கண்டறியப்பட்டுள்ளது. மேற்படி பாடசாலையில் ஒரு வகுப்பில் கல்வி பயிலும் மாணவனுக்கு உடல் மெலிவு ஏற்பட்ட நிலையில் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அந்த மாணவனுக்குக் காசநோய் அறிகுறி இருப்பது கண்டறியப்பட்ட நிலையில் அவருடன் நெருங்கிப் பழகிய மாணவர்கள் சிலரைப் பரிசோதனைக்கு உட்படுத்திய நிலையில், அவர்களுக்கும் காசநோய் இருப்பது தெரியவந்துள்ளது.

  • கனடாவில் தமிழ் இளைஞன் ஒருவர் அதிரடியாக கைது!

    கனடாவில் தமிழ் இளைஞன் ஒருவர் அதிரடியாக கைது!

    கனடாவில் தமிழ் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.43 வயதான சுரேஷ் நித்தியானந்தன் ரொரன்ரோ பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.Don Mills ரயில் நிலையத்திற்கு அருகில் பெண் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 30ஆம் திகதி ரயில் நிலையத்திற்கு அருகில் பெண் ஒருவரை கொடூரமாக தாக்கியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சந்தேகநபருக்கு எதிராக நான்கு குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன. அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் எதுவும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை.

  • குறைக்கப்படவுள்ள விசிட்டர் வீசா!

    குறைக்கப்படவுள்ள விசிட்டர் வீசா!

    கனடா  செல்லும் தற்காலிக குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த திட்டமிட்டுள்ளதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.தற்காலிக விசாவில் நாட்டுக்கு வருவோரின் எண்ணிக்கை குறைக்கப்படும் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார். 2017 ஆம் ஆண்டு கனடாவின் மக்கள் தொகையில் 2 சதவீதமானவர்களே தற்காலிக குடியேறியவர்களாகும்.கனேடிய மக்கள் தொகையில் 7.5 சதவீதம் பேர் தற்காலிகமாக குடியேறியவர்களாகும்.இது நாம் மீண்டும் கட்டுப்பாட்டிற்குள் வர வேண்டிய ஒன்றென பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.   கடந்த வருடத்தில் விசிட்டர் விசாவில் இலங்கையர்கள் உட்பட பெருந்தொகையான வெளிநாட்டவர்கள் கனடாவுக்குள் உள்வாங்கப்பட்டுள்ளமை…

  • பாடசாலையில் இலவச மதிய உணவுதிட்டம் !

    பாடசாலையில் இலவச மதிய உணவுதிட்டம் !

    பசியுடன் பாடசாலைகளுக்கு வரும் பிள்ளைகளுக்காக மதிய உணவு செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. நேற்றிலிருந்து இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக  பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில் நாம் எல்லோருமே, எல்லா பிள்ளைகளுக்கும் வாழ்வின் தொடக்கம் நன்றாக இருக்கவேண்டும் என்றுதான் விரும்புவோம், பள்ளிக்கு வரும் ஒரு பிள்ளை, எனக்கு பசிக்கிறது என்று கூறுமானால், பள்ளி என்னும் சமுதாயம் மற்றும் நாடு என்னும் முறையில், நாம் எல்லோரும் செய்யவேண்டிய வேலை இன்னமும் நிறைய இருக்கிறது என்று பொருள் என்று…

  • உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் முன்னிலையில் கனடா !

    உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் முன்னிலையில் கனடா !

    2024 ஆம் ஆண்டில் மகிழ்ச்சியான G7 நாடுகளின் பட்டியலில் கனடா (Canada) இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.இந்த ஆண்டுக்கான குறித்த தரவரிசையை WHR (World Happiness Report) வெளியிட்டுள்ளது. G7 நாடுகளின் ஒட்டுமொத்த மக்களின் மகிழ்ச்சியின் அடிப்படையில், எல்லா வயதினரும் மகிழ்ச்சியாக உள்ளனர் என்ற அடிப்படையில் கணக்கிடப்பட்டதாகும். G7 நாடுகள் பட்டியலில் கனடா, பிரான்ஸ், அமெரிக்கா, பிரித்தானியா, ஜேர்மனி, ஜப்பான் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் உள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடுகளில், பின்லாந்து முதல் இடத்தைப் பிடிக்க…

  • கைதான விமானப் பணிப்பெண் !

    கைதான விமானப் பணிப்பெண் !

    பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் விமானப் பணிப்பெண் ஒருவர் கனடாவின் ரொறொன்ரோவில் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாகிஸ்தான் விமானத்தில் இருந்து வந்த ஹினா சானி என்ற விமானப் பணிப்பெண்ணின் பயணப்பொதியில் பல்வேறு நபர்களின் கடவுச்சீட்டுகள் இருந்ததைக் கண்டு ரொறன்ரோவில் குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அத்தோடு, பாகிஸ்தான் ஏர்லைன்ஸின் செய்தித் தொடர்பாளர் அவர் கைது செய்யப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளார்.

  • இறக்குமதி செய்யப்படும் பல பொருட்களுக்கான வரி குறைப்பு !

    இறக்குமதி செய்யப்படும் பல பொருட்களுக்கான வரி குறைப்பு !

    இறக்குமதி செய்யப்படும் பல பொருட்களுக்கான துறைமுகம் மற்றும் விமான நிலைய அபிவிருத்தி வரியை குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அந்தவகையில், 10 சதவீத வரியை 6 சதவீதமாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.மேலும், மார்ச் 29 ஆம் திகதி முதல் இந்த வரிக்குறைப்பு நடைமுறைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.