Tag: #canadanews

  • கனடாவில் மோசமடைந்து செல்லும் வருமான ஏற்றத்தாழ்வு!

    கனடாவில் மோசமடைந்து செல்லும் வருமான ஏற்றத்தாழ்வு!

    கனடாவில் வருமான ஏற்றத்தாழ்வு நிலைமை மோசமடைந்து செல்வதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இந்நிலையில் அதிகளவு வருமானம் ஈட்டுவோருக்கும் குறைந்தளவு வருமானம் ஈட்டுவோருக்கும் இடையிலான இடைவெளி பெருமளவு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 2015 ஆம் ஆண்டின் பின்னர் இந்த இடைவெளி கடந்த ஆண்டில் அதிகளவில் உயர்வடைந்துள்ளதோடு, உயர் வட்டி வீதங்கள் காரணமாக குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் ஈட்டுவோர் அதிகளவில் செலவிட நேரிட்டுள்ளது.

  • கெஹெலியவிற்கு மீண்டும் நீடிக்கப்பட்ட விளக்கமறியல்!

    கெஹெலியவிற்கு மீண்டும் நீடிக்கப்பட்ட விளக்கமறியல்!

    முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல(Keheliya Rambukwella) உள்ளிட்ட 9 சந்தேகநபர்களும் தரமற்ற ஊசி மருந்துகளை இறக்குமதி செய்யப்பட்ட வழக்கில் எதிர்வரும் மே மாதம் ஆறாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான வழக்கு இன்று (22.04.2024) மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே மாளிகாகந்த நீதவான் லோசினி அபேவிக்ரம இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சார்பில் முன்னிலையான ஜனாதிபதியின் சட்டத்தரணி முன்வைத்த பிணை கோரிக்கை அங்கு நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

  • கனடாவில் புலம்பெயர உள்ளவர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்!

    கனடாவில் புலம்பெயர உள்ளவர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்!

    கனடாவிற்கு வரும் புதிய குடியேற்றவாசிகளுக்கான முக்கியமான அம்சங்களில் ஒன்று, அவர்கள் எந்த நகரத்தில் குடியேறுவது சிறந்தது என்பதை தீர்மானிப்பது. அதன்படி, அவை வேலை வாய்ப்புகள், அத்தியாவசிய சேவைகள், பல்வேறு கலாச்சார சலுகைகள் மற்றும் வலுவான சமூக உறவுகள் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றன. இந்நிலையில் கனடாவிற்கு  புலம்பெயர உள்ளவர்கள் குடியேற சிறந்த பத்து நகரங்களின் பட்டியலொன்றை அந்நாட்டு ஊடகமொன்று வெளியிட்டுள்ளது.குறித்த பட்டியலில் உள்ளடங்கும் நகரங்களும் மாகாணங்களும் பின்வருமாறு, 1. ரொறன்ரோ – ஒன்டாரியோ மாகாணம் 2. வான்கூவர் – பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணம்…

  • கனடாவில் வரலாற்று சாதனை படைத்த 17 வயது தமிழக வீரர்

    கனடாவில் வரலாற்று சாதனை படைத்த 17 வயது தமிழக வீரர்

    கனடாவில் (canada) நடைபெற்ற கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் ( FIDE tournament) இந்தியா (india) – தமிழ்நாட்டைச் (tamil nadu) சேர்ந்த 17 வயதான கிராண்ட் மாஸ்டர் குகேஷ் (D Gukesh) வெற்றி பெற்றுள்ளார். இவர் விஸ்வநாதன் ஆனந்துக்குப் (Viswanathan Anandu) பின் உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு ( World Championship final) தகுதி பெற்ற இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அத்துடன் இளம் வயதில் கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடரை வெல்லும் நபர் என்ற…

  • குண்டுத் தாக்குதலின் எதிரொலி – இஸ்ரேலிடம் விளக்கம் கோரும் கனடா

    குண்டுத் தாக்குதலின் எதிரொலி – இஸ்ரேலிடம் விளக்கம் கோரும் கனடா

    காசாவில் (gaza) மக்களுக்கான தண்ணீர் விநியோகத்தில் ஈடுபட்டிருந்த டிரக் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து கனடா (Canada) இஸ்ரேலிடம் (Israel) தகவல் கேட்டுள்ளது. டொராண்டோவை (Toronto ) தளமாகக் கொண்ட உதவி அமைப்பான சர்வதேச வளர்ச்சி மற்றும் நிவாரண அறக்கட்டளை (IDRF) காசாவில் உள்ள பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு ஆறு மாதங்களுக்கும் மேலாக “சுத்தமான குடிநீரை” வழங்கி வந்துள்ளது. இந்நிலையில், குறித்த தண்ணீர் டிரக் மீது கடந்த வெள்ளிக்கிழமை குண்டுவீசப்பட்டதாக (IDRF) அமைப்பு குறிப்பிட்டுள்ளது.கனடாவின் (Canada) சர்வதேச அபிவிருத்தி…

  • கனடாவை அதிர வைத்த கொள்ளை!

    கனடாவை அதிர வைத்த கொள்ளை!

    கனடாவின் (Canada) டொராண்டோ (Toronto) பியர்சன் விமான நிலையத்தில் இடம்பெற்ற 400 கிலோ கிராம் எடையுடை தங்கம் மற்றும் வெளிநாட்டு நாணய கொள்ளையுடன் தொடர்புடைய கொள்ளைக் கும்பல் கைது செய்யப்பட்டுள்ளதாக பீல் பிராந்திய பொலிஸ் பிரதானி நிசான் துரையப்பா தெரிவித்துள்ளார். இந்தக் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய 12 பேருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், விமான நிலையத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இடம்பெற்ற கொள்ளையுடன் தமிழர் ஒருவரும் தொடர்புபட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கனடாவின் (canada) பிரம்டனை…

  • கனடாவில் அரசாங்க ஊழியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த அரசாங்கம்!

    கனடாவில் அரசாங்க ஊழியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த அரசாங்கம்!

    கனடாவில் அரசாங்க ஊழியர்களுக்கு அதிர்ச்சி தகவல் ஒன்றை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.எதிர்வரும் நான்கு ஆண்டு காலப் பகுதியில் சுமார் ஐயாயிரம் அரசாங்க ஊழியர்கள் பணிகளை இழக்க நேரிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத் திட்டத்தில் இந்த ஆட்குறைப்பு குறித்த யோசனை முன்மொழியப்பட்டுள்ளது. நிதி அமைச்சரும், பிரதிப் பிரதமருமான கிறிஸ்டியா ப்ரிலாண்ட் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். செலவுகளை குறைக்கும் நோக்கில் இவ்வாறு ஆட்குறைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். பதவி விலகல்கள் மற்றும் ஓய்வு பெறுதல்கள் போன்ற சந்தர்ப்பங்களில் புதிதாக…

  • வவுனியாவில் குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டி வழிப்பறி!

    வவுனியாவில் குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டி வழிப்பறி!

    வவுனியாவில் மோட்டார் சைக்கிளில் சென்றவர்களிடம் முகமூடியணிந்த மூவரால் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. இதன்போது, அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளையும் அபகரித்து கொண்டு கொள்ளையர்கள் தப்பிச்  சென்றுள்ளனர். குறித்த சம்பவமானது, இன்று (17.04.2024) அதிகாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.சிறு குழந்தை ஒன்றின் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டி இவ்வாறு நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.  

  • பொதுப் போக்குவரத்து பயணிகளுக்கு மகிழ்ச்சி செய்தி

    பொதுப் போக்குவரத்து பயணிகளுக்கு மகிழ்ச்சி செய்தி

    ஒன்றாரியோ மாகாணத்தில் ரயிலில் பொதுப் போக்குவரத்தில் ஈடுபடுவோருக்கு மகிழ்ச்சியான செய்தியொன்றை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. மாகாண முதல்வர் டக் போர்ட் இந்த விடயத்தை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.GO Transit போக்குவரத்து சேவை வாரந்தம் 300 புதிய ரயில் சேவைகளை ஆரம்பிக்க உள்ளதாக அறிவித்துள்ளார். இந்த மாத இறுதிக்குள் இவ்வாறு ரயில் போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். கடந்த 2013ம் ஆண்டின் பின்னர் மாகாணத்தில் அறிமுகம் செய்யப்பட்ட அதி கூடிய போக்குவரத்துப் பயணங்கள் இந்த ஆண்டில் அறிமுகம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.…

  • கனடாவில் பலஸ்தீன ஆதரவு போராட்டத்தில் ஈடுபட்ட 21 பேர் கைது

    கனடாவில் பலஸ்தீன ஆதரவு போராட்டத்தில் ஈடுபட்ட 21 பேர் கைது

    கனடாவில் பலஸ்தீன ஆதரவு போராட்டத்தில் ஈடுபட்ட 21 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.கனடாவின் ஹாலிபெக்ஸ் பகுதியில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஹொலிஸ் வீதி மற்றும் டெர்மினால் வீதி என்பனவற்றுக்கு அருகாமையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீதிப் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படும் வகையில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்துடன் தொடர்புடைய 21 பேரை ஹாலிபெக்ஸ் பொலிஸார் கைது செய்துள்ளனர். போராட்ட இடத்திலிருந்து கலைந்து செல்லுமாறு பொலிஸார் விடுத்த அறிவுறுத்தலை ஏற்க மறுத்த காரணத்தினால் இவர்கள் கைது செய்யப்பட்டதாக…