Tag: #breakingnews
-

தாக்குதலாளிகளை கைது செய்ய தவறின் வீதியில் இறங்கி போராடுவோம்!
யாழில் ஊடகவியலாளர் வீட்டின் மீது தாக்குதல் நடத்தி , வாகனங்களுக்கு தீ மூட்டிய சம்பவங்கள் தொடர்பில் உரிய விசாரணைகளை விரைவாக முன்னெடுத்து உண்மைக் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன்னதாக நிறுத்த அரசு தவறுமாயின் ஊடகவியலாளர்களாகிய நாம் வீதிகளில் இறங்கி போராட பின்னிற்கப்போவதில்லையென யாழ்.ஊடக அமையம் அறிவித்துள்ளது. யாழ்ப்பாண ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபன் வீட்டின் மீதான தாக்குதல்கள் தொடர்பில் சுதந்திர ஊடக அமைப்பு காவல்துறை அதிபருடன் கொழும்பில் நேரில் பேச்சுக்களை நடாத்தியுள்ளது. யாழ்ப்பாணத்திற்கு வருகை…
-

கனடாவில் அதிர்ச்சி சம்பவம்… 16 வயது சிறுவன் துப்பாக்கிச்சூடு கொலை!
கனடாவின் ஸ்காப்ரோவில் இடம் பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 16 வயதான சிறுவன் கொல்லப்பட்டுள்ளார்.பிற்பகல் வேளையில் இந்த 16 வயது சிறுவன் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளான். இந்த சம்பவம் தொடர்பில் டொரன்டோ போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். பிளைன்டோவர் பிளாசா பகுதியில் வாகன தரிப்பிட பகுதியில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. பல்வேறு அங்காடிக்கே எதிரில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளமை காணொளிகள் மூலம் தெரிய வந்துள்ளது. துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் படுகாயம் அடைந்த…
-

பாதுகாப்பு செலவுகள் அதிகரிக்கும் கனடா!
நாட்டின் பாதுகாப்பு செலவுகள் அதிகரிக்கப்படும் என கனடிய பாதுகாப்பு அமைச்சர் பில் பிளயர் தெரிவித்துள்ளார். இந்த தசாப்தம் பூர்த்தியாகும் முன்னதாக நேட்டோ கூட்டுப் படையின் பரிந்துரைகளுக்கு அமைய பாதுகாப்பு செலவுகள் மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டு வீதத்தை பாதுகாப்பு செலவுகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட வேண்டுமென நேட்டோ அமைப்பு கோரியுள்ளது.
-

வடக்கில் காற்றின் வேகம் அதிகரிக்கும்!
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. . இதேவேளை, புத்தளத்தில் இருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக…
-

மட்டக்களப்பில் பெண் மீது துப்பாக்கி சூடு – ஒருவர் கைது!
மட்டக்களப்பு காத்தான்குடி பகுதியில் பெண்ணொருவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு விட்டு தப்பி சென்ற நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அதேவேளை துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான பெண் மட்டக்களப்பு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள புதிய காத்தானகுடி, இலாஹா வீதி, பகுதியில் உள்ள வீட்டில் வசித்து வந்த குடும்ப பெண்ணான 32 வயதுடைய சித்தீக் சிபானியா எனும் பெண்ணின் மீது நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பெண்ணின் கணவர் அவுஸ்ரேலியாவில்…
-

மருத்துவ துறைக்கு தெரிவான மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு!
மருத்துவ துறைக்கு தெரிவான மாணவன் ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளான். காரைதீவைச் சேர்ந்த மாணவன் எஸ்.அக்சயன் (வயது-20) எனும் மாணவனே உயிரிழந்துள்ளான். காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரியில் இம்முறை மருத்துவத் துறைக்கு தெரிவான இரண்டு மாணவர்களுள் அக்சயன் ஒருவராவார். இவர் அண்மையில் வெளியான G.C.E A/L 2023 (2024) பரீட்சையில் சித்திபெற்று மாவட்டத்தில் 23 வது இடத்தில் மருத்துவ துறைக்கு தெரிவாகியிருந்தார். அவர் தனது குடும்பத்தோடு மூன்று நாட்களுக்கு முன்பு உகந்த மலை முருகன் ஆலயத்துக்கு சென்று…
-

யாழில். மைதானத்திற்கு புகுந்து வாள் வெட்டு – தாக்குதலாளிகளை மடக்கி பிடித்து நயப்புடைத்த ஊரவர்கள்!
யாழ்ப்பாணத்தில் கரப்பந்தாட்ட இறுதி போட்டி நடைபெறவிருந்த மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பல் ஒன்று வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டதில் , இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளனர். மீசாலை பகுதியை சேர்ந்த சிவகுமார் ராகுலன் (வயது 25) எனும் இளைஞனே வாள் வெட்டு தாக்குதலுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைக்காக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வாள் வெட்டு தாக்குதல் மேற்கொண்ட 12 பேரை கொண்ட வன்முறை கும்பலில் நான்கு பேரை ஊரவர்கள் மடக்கி பிடித்து, நயப்புடைத்து , மின்…
-

மண்டைதீவில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பேன்!
யாழ்ப்பாணம் – மண்டைதீவு பகுதியில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க நடவடிக்கை எடுப்பேன் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். நான் யாழ்ப்பாணத்தில் ஒரு மைதானத்தில் இளைஞர்களுடன் கதைத்த ஒரு விடயத்தைச் சிலர் சர்ச்சையாக்கியுள்ளனர். அதனை வைத்து எனக்கு எதிரான பிரசாரங்களை அவர்கள் முன்னெடுத்து வருகின்றனர். நல்லாட்சி காலத்தில் மண்டைதீவில் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டு…
-

பாசையூர் அந்தோனியார் பெருவிழா!
யாழ்ப்பாணம் பாசையூர் புனித அந்தோனியார் ஆலயப் பெருவிழா நேற்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த பெருவிழாவில் பதுவைப் புனிதரான அந்தோனியார் தேரில் ஏறி வீதி உலா வந்து பக்தர்களுக்கு ஆசிர் வழங்கினார். இந்நிகழ்வில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் அந்தோனியாரைத் தரித்து ஆசி பெற்றனர்.
-

யாழ்.ஊடகவியலாளர் வீட்டின் மீதான தாக்குதலின் பின்னணியில் புலனாய்வாளர்கள் ?
யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளரின் வீட்டின் மீதான தாக்குதலின் பின்னணியில் அரச புலனாய்வுப் பிரிவு இருப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் சந்தேகம் வெளியிட்டார். யாழ்ப்பாணம் – அச்சுவேலியில் உள்ள ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனின் வீட்டின் மீது இனந்தெரியாத நபர்கள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர். குறித்த தகவலறிந்து நேற்று அங்கு சென்று பார்வையிட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,…