Category: உலக செய்திகள்

  • கனடாவில் வேலைவாய்ப்பு: பராமரிப்பு பணியாளர்களுக்கு அதிக தேவை

    கனடா உலகம் முழுவதிலும் இருந்து பராமரிப்பாளர் (Caregivers) பணிகளுக்கான திறமையான நபர்களை அழைக்கிறது. பராமரிப்பாளர் பணியை சமூகத்திற்கு பயனுள்ள தொழில்முறையாக கருதுமாறு கனடா ஊக்குவிக்கிறது. விசா ஸ்பான்சர் ஜாப்ஸ் இணையதளத்தின் தகவல்படி, கனடாவின் பல பராமரிப்பாளர் வேலைவாய்ப்புகள் விசா ஸ்பான்சர்ஷிப் வாய்ப்புகளுடன் வருகிறது. இதன் மூலம் சர்வதேச விண்ணப்பதாரர்கள் எளிதில் விண்ணப்பிக்கலாம். இந்த வேலைகள் தேவையுடையோரின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த கனடா திட்டமிட்டுள்ளது. வயது: 22 வயதிற்கு மேற்பட்டோர் விண்ணப்பிக்கலாம். – கல்வி மற்றும் அனுபவம்: குறிப்பிட்ட…

  • மத்திய கிழக்கை அச்சத்தில் ஆழ்த்தியுள்ள ஹிஸ்புல்லா: ஹமாஸ் தலைவர் தொடர்பில் பரபரப்பு காணொளி

    ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வார் கொல்லப்பட்டமையானது இஸ்ரேலுடனான மோதலை ஒரு புதிய அணுகுமுறைக்கு கொண்டுசெல்லும் என ஹிஸ்புல்லா அமைப்பு எச்சரித்துள்ளது. இஸ்ரேல் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்துவதாகவும், தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கத் தாங்கள் தயாராக உள்ளதாகவும் ஹிஸ்புல்லா அமைப்ப கூறியுள்ளது. ஹமாஸ் தலைவர் இறப்பதற்கு சற்று முன்பு இஸ்ரேலின் ஆளில்லா விமானம் அவருக்கு அருகில் பறந்து செல்லும் காணொளியை இஸரேலிய பாதகாப்பு அமைச்சு வெளியிட்டதடக் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ஹிஸ்புல்லா மற்றும்…

  • ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வார் கொலை – காசா ரோந்து நடவடிக்கையில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவிப்பு

    ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வார் காசா பகுதியில் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் வெளி விவகார அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் (Israel Katz) தெரிவித்துள்ளார். ஆயினும் இதுவரை ஹமாஸ் அமைப்பு எவ்வித அறிக்கைகளையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இஸ்ரேலியப் படையினரால் யஹ்யா சின்வார் நேற்று (17) கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் வெளி விவகார அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார். ‘படுகொலை மற்றும் அட்டூழியங்களுக்குப் பின்னால் இருந்த மூளைக்காரர்’ யஹ்யா சின்வார் என அவர் வர்ணித்துள்ளார். இஸ்ரேல் பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்துள்ள…

  • மில்டன் சூறாவளி புயல்; இருளில் தவித்த 20 லட்சம் மக்கள்

    அமெரிக்காவில் மில்டன் சூறாவளி புயல் உருவான நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தியபோதும் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டு, இருளில் தவித்தனர். புளோரிடா மாகாணத்தில் சீஸ்டா கீ பகுதியருகே அந்நாட்டு நேரப்படி நேற்றிரவு 8.30 மணியளவில் மில்டன் சூறாவளி புயல் கரையை கடந்தது. இதனால், மணிக்கு 195 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசி சென்ற சூறாவளி வலுவிழந்தது. சூறாவளியின் தீவிரம் குறைந்தபோதும், அதிக ஆபத்து ஏற்படுத்தும் பிரிவிலேயே மில்டன் வைக்கப்பட்டு உள்ளது.…

  • ஐ.எஸ். குழு பிடித்த பெண் காசாவில் மீட்கப்பட்டார்

    ஈராக்கில் இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்.) குழுவால் 2014 ஆம் ஆண்டு கடத்திச் செல்லப்பட்ட யாசிதி பெண் ஒருவர் 21 வயதில் காசாவில் இருந்து மீட்கப்பட்டுள்ளார். ஈராக், இஸ்ரேல், ஜோர்தான் மற்றும் அமெரிக்கா மேற்கொண்ட இரகசிய நடவடிக்கை மூலமே அந்தப் பெண் மீட்கப்பட்டுள்ளார். ஈரான் மற்றும் சிரிய நிலப்பகுதிகளை ஐ.எஸ். குழு ஆக்கிரமித்தபோது அங்குள்ள சிறுபான்மை யாசிதி மக்கள் அடிமைகளாகப் பிடிக்கப்பட்டதோடு பலரும் கொல்லப்பட்டனர். அப்போது 11 வயது சிறுமியாக இருந்த இந்தப் பெண் ஐ.எஸ். குழுவால் பிடிக்கப்பட்டு…

  • தீடிரென விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர்! 21 பேருக்கு நேர்ந்த நிலை?

    பாகிஸ்தானில் ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்திருப்பதாகவும் பலர் காயமடைந்திருப்பதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இஸ்லாமாபாத் நகரில் இன்று காலை 11.15 மணியளவில் மி-8எம்.டி.வி.-1 ரக ஹெலிகாப்டர் ஒன்று புறப்பட்டு ஷீவா நகர் நோக்கி சென்றுள்ளது. இதன்பின்பு, மதியம் 1.15 மணியளவில் ஹெலிகாப்டரிலிருந்த பயணிகளில் ஒருவர் இறங்கியுள்ளார். இதன்பின்பு பன்னு நகர் நோக்கி ஹெலிகாப்டர் புறப்பட்டபோது, திடீரென அதன் இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஹெலிகாப்டரை மீண்டும் ஷீவா…

  • சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

    சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை இன்றைய தினம் சற்று அதிகரித்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 68.18 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது இதேவேளை, பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 71.98 அமெரிக்க டொலராக நிலவுகிறது. இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 2.90 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.