Category: உலக செய்திகள்
-

காசாவில் உடனடியாக போர்நிறுத்தம் ; ஐ.நா.வில் தீர்மானம் நிறைவேற்றம்
காசாவில் உடனடியாக போர்நிறுத்தம் அறிவிக்க இஸ்ரேலை வலியுறுத்தி ஐநா.பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அத்துடன் ஹமாஸ் தீவிரவாதிகளால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள அனைத்து பிணைக்கைதிகளையும் எந்தவித நிபந்தனையுமின்றி விடுவிக்க வேண்டும் என்றும் அந்தத் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஐ.நா.பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டரஸ் எக்ஸ் பதிவில் , தீர்மானத்தை உடனடியாக அமல்படுத்தத் தவறினால் மன்னிக்க முடியாத குற்றமாகும் என தெரிவித்துள்ளார்.
-

இளவரசி கேட் மிடில்டனுக்கு கீமோதெரபி சிகிச்சை
பிரிட்டன் இளவரசி கேட் மிடில்டன் புற்றுநோய் காரணமாக கீமோதெரபி சிகிச்சை பெற்று வருவதாக தெரிகிறது. வேல்ஸ் இளவரசர் வில்லியமின் மனைவி கேட் மிடில்டனுக்கு வயது 42. இவர்கள் கடந்த 2011ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இத்தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக கேட் மிடில்டனை காணவில்லை என வதந்திகள் பரவின. இதற்கு பதிலளிக்கும் வகையில் கடந்த ஜனவரி மாதம் கென்சிங்டன் அரண்மனை தரப்பில், இலண்டன் மருத்துவமனையில் கேட் மிடில்டன் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அங்கு…
-

இசை கச்சேரியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு – 60 பேர் பலி
ரஷ்யாவில் இசை கச்சேரி நடந்த அரங்கில் மர்மநபர்கள் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் 60 பேர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டிருக்கின்றனர். நேற்றிரவு ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் ‘பிக்னிக்’ எனும் ராக் இசைக்குழுவினர் கச்சேரியை நடத்தியிருந்தனர். இந்த கச்சேரியில் அடையாளம் தெரியாத 3-5 நபர்கள் கொண்ட குழு உள்ளே புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தியிருக்கிறது. இந்த தாக்குதலில் 60 பேர் கொல்லப்பட்டதுடன் 130 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று…
-

இத்தாலி பெண் பிரதமரின் ஆபாச டீப்பேக் :இழப்பீடு கேட்டு வழக்கு
இத்தாலி பெண் பிரதமர் ஜார்ஜியா மெலோனியின் முகத்தை, ஆபாச திரைப்படத்தில் உள்ள நடிகையின் உடலுடன் பொருத்தி வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்ததாக தெரிகிறது. நவீன உலகம் பெருமையாக பேசிக்கொள்ளும் செயற்கை நுண்ணறிவின் தாக்கம் மற்றும் அதன் எதிர்விளைவுகள் டிஜிட்டல் துறையில் அதிகரித்துள்ளது. இந்த தொழில்நுட்பத்தை பொழுதுபோக்கு அம்சங்களில் அதிகம் பயன்படுத்துகிறார்கள். டீப்பேக் என்ற ஏ.ஐ. வீடியோ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, ஒருவரின் முகத்தை வேறு ஒருவரின் உடலோடு பொருத்தி வீடியோ வெளியிடுவது அதிகரித்து வருகிறது. அவ்வகையில், இத்தாலி பெண் பிரதமர்…
-

வெப்பநிலை தொடர்பில் ஐநா சிவப்பு எச்சரிக்கை!
இந்தாண்டில் வெப்பநிலை அதிகமாக இருக்கும் என ஐநாவின் காலநிலை மாற்ற நிறுவனம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், கடந்த 200 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த ஆண்டு பெப்ரவரி முதல் தற்போது வரை, புவியின் சராசரி வெப்பநிலை 1 புள்ளி 45 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் மோசமான நிலையை நோக்கி செல்வதாக கவலை தெரிவித்துள்ள இந்நிறுவனம், வெப்பநிலை அதிகரிப்பால், பனிப்பாறைகள் உருகி, கடல்மட்டத்தின் அளவு உயரும் என்றும் எச்சரித்துள்ளது. இதேநிலை நீடிக்கும் பட்சத்தில்…