Category: இலங்கை செய்திகள்

  • யாழில் 30 இலட்ச ரூபாய் பெறுமதியான பாலை மரக்குற்றிகள் மீட்பு – சந்தேகநபர்கள் தப்பியோட்டம்!

    யாழில் 30 இலட்ச ரூபாய் பெறுமதியான பாலை மரக்குற்றிகள் மீட்பு – சந்தேகநபர்கள் தப்பியோட்டம்!

    யாழ்ப்பாணத்தில் சுமார் 30 இலட்ச ரூபாய் பெறுமதியான மரக்குற்றிகளை கடத்தி சென்றவர்களை பொலிஸார் மடக்கி பிடிக்க முற்பட்ட நிலையில் தப்பி சென்றுள்ளனர்.   சந்தேக நபர்கள் தப்பி சென்றுள்ள நிலையில் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டிப்பர் வாகனமும் மரக்குற்றிகளையும் பொலிஸார் மீட்டு சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளனர். சாவகச்சேரி பொலிஸார் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கனகம்புளியடி சந்திக்கு அருகில் வீதி கடமையில் இருந்த வேளை , சந்தேகத்திற்கு இடமான முறையில் வீதியில் பயணித்த டிப்பர் வாகனம் ஒன்றினை…

  • நாகை – காங்கேசன்துறை கப்பல் சேவை நாளை இடம்பெறாது – 17 ஆம் திகதி ஒத்திவைப்பு!

    நாகை – காங்கேசன்துறை கப்பல் சேவை நாளை இடம்பெறாது – 17 ஆம் திகதி ஒத்திவைப்பு!

    நாகை – காங்கேசன்துறை கப்பல் சேவை தவிர்க்க முடியாத சில சட்டரீதியான அனுமதிகள் தாமதமானமையால் கப்பல் சேவை எதிர்வரும் 17ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கப்பல் சேவை நிறுவனம் அறிவித்துள்ளது. காங்கேசன் துறைக்கும் தமிழகத்தின் நாகப்பட்டினத்திற்கும் இடையிலான கப்பல் சேவை நாளைய தினம் திங்கட்கிழமை ஆரம்பமாக இருந்தது. இந்நிலையில் தவிர்க்க முடியாத சில சட்டரீதியான அனுமதிகள் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதங்கள் மற்றும் கப்பலின் தாமதமான வருகையாலும் நாளைய தினம் கப்பல் சேவை இடம்பெறாது எனவும், 17 ஆம் திகதி…

  • கனடா செல்ல முயன்ற இருவர் கைது – அவர்களுக்கு உதவிய யாழ்.வாசியும் கைது!

    கனடா செல்ல முயன்ற இருவர் கைது – அவர்களுக்கு உதவிய யாழ்.வாசியும் கைது!

    போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி கனடாவுக்குத் தப்பிச் செல்ல முயன்ற இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து, நேற்றைய தினம் சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர் .   அதேவேளை  இந்த சம்பவத்திற்கு உதவிய சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு பிரதேசத்தில் வசிக்கும் 47 வயதுடைய நபரும், வவுனியா பிரதேசத்தில் வசிக்கும் 37 வயதான  இருவரும் துபாய் ஊடாக கனடா செல்வதற்காக   கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளனர் . இவர்கள் இருவரும் போலி கடவுச்சீட்டுகளைப் பயன்படுத்தியதால், அவர்களைக் கைது…

  • யாழில் பண மோசடியில் ஈடுபட்ட குற்றத்தில் தென்னிலங்கை கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் கைது!

    யாழில் பண மோசடியில் ஈடுபட்ட குற்றத்தில் தென்னிலங்கை கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் கைது!

    வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதாக யாழில் பண மோசடியில் ஈடுபட்ட தென்னிலங்கை அரசியல் கட்சி ஒன்றின் யாழ் மாவட்ட அமைப்பாளர் யாழ்ப்பாண பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுளளார்.   யாழ்ப்பாணத்தை சேர்ந்தவரை வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பதாக கூறி 09 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாயை பெற்று மோசடி செய்துள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட தரப்பினரால் யாழ்.மாவட்ட பெருநிதி குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து , பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில், குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது…

  • யாழில். மாணவி ஒருவர் குழந்தையை பிரசவித்த பின்னர் , குழந்தையை கைவிட்டு தலைமறைவு!

    யாழில். மாணவி ஒருவர் குழந்தையை பிரசவித்த பின்னர் , குழந்தையை கைவிட்டு தலைமறைவு!

    யாழ்ப்பாணத்தை சேர்ந்த பாடசாலைச் சிறுமி ஒருவர், யாழ்.போதனா வைத்தியசாலையில்  குழந்தையை பிரசவித்த பின்னர் , வைத்தியசாலையில் இருந்து தப்பி சென்றுள்ளார்.   வடமராட்சி துன்னாலைப் பகுதியைச் சேர்ந்த 15 வயதான பாடசாலை மாணவி கர்ப்பம் தரித்த நிலையில் தனது தாயுடன் குழந்தை பிரசவத்துக்காக நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்நிலையில் மாணவி நேற்றைய தினம் இரவு குழந்தையை பிரசவித்த நிலையில், குழந்தையை வைத்தியசாலையில்  விட்டுவிட்டு, குழந்தையின் தாயான பாடசாலை மாணவியும் , மாணவியின் தாயாரும் இன்றைய…

  • யாழில். வெப்பத்தால் உயிரிழப்பு அதிகரிப்பு ; நேற்றும் ஒருவர் உயிரிழப்பு!

    யாழில். வெப்பத்தால் உயிரிழப்பு அதிகரிப்பு ; நேற்றும் ஒருவர் உயிரிழப்பு!

    யாழ்ப்பாணத்தில் நிலவும் கடுமையான வெப்பம் காரணமாக நேற்றைய தினம் வெள்ளிக்கிழமையும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.   அல்வாய் கிழக்கு ஆண்டவர் தோட்டம் பகுதியை சேர்ந்த 68 வயதுடைய வல்லிபுரம் கோபாலசிங்கம் என்பவரே உயிரிழந்துள்ளார். முதியவர் வீட்டில் மயக்கமுற்ற நிலையில், வீட்டில் இருந்தவர்களால் மீட்கப்பட்டு , பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் உடற்கூற்று பரிசோதனை நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை சட்ட வைத்திய அதிகாரி மேற்கொண்ட போது , கடுமையான வெப்ப தாக்கத்தால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக அறிக்கையிட்டார்.…

  • யாழில். வழிப்பறியில் ஈடுபட்ட குற்றத்தில் இருவர் வாளுடன் கைது !

    யாழில். வழிப்பறியில் ஈடுபட்ட குற்றத்தில் இருவர் வாளுடன் கைது !

    யாழ்ப்பாணத்தில் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டில் இருவர் வாளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஒருவர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவரை கைது செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.   யாழ்ப்பாணத்தில் கடந்த வாரம் வீதியில் சென்று கொண்டிருந்த பெண்ணொருவரை வழிமறித்து கத்தியை காட்டி அவரது சங்கிலியை மூவர் அடங்கிய வழிப்பறி கொள்ளை கும்பல் கொள்ளையடித்து சென்று இருந்தது. சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் , பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்த நிலையில் , முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை…

  • முன்னாள் இராணுவ அதிகாரிகள் இருவர் கைது!

    முன்னாள் இராணுவ அதிகாரிகள் இருவர் கைது!

    முன்னாள் இராணுவ மேஜர் ஜெனரல் ஒருவரும் முன்னாள் இராணுவ சார்ஜன்ட் ஒருவரும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளனர். குருநாகல் பிரதேசத்தில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ குறிப்பிட்டார். ரஷ்யா மற்றும் உக்ரைனில் உள்ள கூலி இராணுவப் படை முகாம்களுக்கு முன்னாள் ராணுவ வீரர்களை கடத்திய குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  • ஜனாதிபதி தேர்தல் தொடர்பான விசேட அறிவிப்பு!

    ஜனாதிபதி தேர்தல் தொடர்பான விசேட அறிவிப்பு!

    ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 17 ஆம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 16ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதன்படி தேர்தல் குறித்த வேட்பு மனுக்கள் உரிய காலப்பகுதியில் அழைக்கப்படும் என அந்த ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.

  • யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அவதூறு பரப்பியதாக இளைஞனுக்கு எதிராக முறைப்பாடு!

    யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அவதூறு பரப்பியதாக இளைஞனுக்கு எதிராக முறைப்பாடு!

    சமூக வலைத்தளங்களில் யாழ் போதனா வைத்தியசாலை தொடர்பில் அவதூறு பரப்பிய நபருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தொடரவுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ்.போதனா வைத்தியசாலை தாதியர் ஒருவர் நோயாளிகளிடம் மனிதாபிமானம் இல்லாதது நடந்து கொண்டதாக சில நாட்களுக்கு முன்பாக பேஸ்புக், ரிக்ரோக்  மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் நபர் ஒருவரின் காணொளி பகிரப்பட்டு வந்தது. காணொளியில், போதனா வைத்தியசாலை தொடர்பில் குற்றச்சாட்டுக்களை முன் வைத்த நபர் சுகாதார அமைச்சின்…