Category: இலங்கை செய்திகள்
-

முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கிய குற்றச்சாட்டில் கைதானவர்கள் விளக்கமறியலில்!
திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சேனையூர் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறிய குற்றச்சாட்டில் கைதான பல்கலைக்கழக மாணவி உள்ளிட்ட நால்வரையும் எதிர்வரும் 27ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. சம்பூர் பொலிசாரினால், நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்யப்பட்ட நால்வரும் இன்றைய தினம் திங்கட்கிழமை மூதூர் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டதை அடுத்து , அவர்களை எதிர்வரும் 27ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது. சமூக செயற்பாட்டாளர் கமலேஸ்வரன் விஜிதா (வயது 40), பல்கலைக்கழக மாணவி கமலேஸ்வரன் தேமிலா (வயது 22),…
-

நினைவேந்தல் நிகழ்வுகளை முன்னெடுத்தவர்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை!
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் அம்பாறை பெரிய நீலாவணை பாண்டிருப்புப் பகுதியில் நினைவேந்தல் நிகழ்வுகளை முன்னெடுப்பதற்கு பொலிஸார் தடை ஏற்படுத்தியுள்ளனர். முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்தவர்களின் நினைவாக முள்ளிவாய்க்கால் கஞ்சிகாய்ச்சி பரிமாறப்பட்டு வடக்கு கிழக்கில் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை கல்முனை பாண்டிருப்பு அரசடி அம்மன் ஆலய முன்றலில், அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கம் பொதுமக்களுடன் இணைந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதன்போது சம்பவ இடத்திற்கு வருகை…
-

வல்வெட்டித்துறையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வார்ப்பு!
முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகமும் முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி பவனியும் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை வல்வெட்டித்துறை பகுதியில் இடம்பெற்றது. விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களது பூர்வீக வீட்டிற்கு அருகில், ஆலடிச்சந்தியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. அதன் போது , முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தியில் முள்ளிவாய்க்கால் மண்ணில் உயிர்நீத்தவர்களை நினைவுகூறி இரு மாவீரர்களின் தந்தையான தங்கேஸ்வரனால் பொதுச்சுடரேற்றி வைக்கப்பட்டு தொடர்ச்சியாக ஈகைச்சுடரேற்றி அகவணக்கம் செலுத்தி மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.
-

யாழ்.சாட்டியில் வெடிபொருட்களுடன் ஒருவர் கைது!
யாழ்ப்பாணம் சாட்டி கடற்கரை பகுதியில் இருந்து சுமார் 03 கிலோ வெடிமருந்துகள் உள்ளிட்ட வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் , அவற்றை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சாட்டி கடற்கரை பகுதியில் வெடிபொருட்கள் காணப்படுவதாக, நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை பொலிஸ் விசேட அதிரடி படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த விசேட அதிரடி படையினர் 03 கிலோ 145 கிராம் வெடி மருந்துக்கள் ,…
-

யாழ்.பல்கலை முன்றலில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வார்ப்பு!
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரமானது இடம்பெற்றுவரும்நிலையில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி இன்று விநியோகிக்கப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் யாழ் பல்கலைக்கழக விஞ்ஞான பீட நுழைவாயிலில் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகிக்கப்பட்டது. 2009ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தில் மக்கள் துன்பப்பட்டு, வறுமைப்பட்டு, உணவு இல்லாமல் தவித்தனர். எத்தனையோ சிறுவர்கள், பெரியவர்கள் சொல்ல முடியாத கொடுமைக்கு ஆளானார்கள். வலிகள் நிறைந்த அந்த நேரத்தில் கஞ்சி தான் லட்சக்கணக்கான மக்களின் உயிரை காத்தது என்ற அடிப்படையில் முள்ளிவாய்க்கால்…
-

யாழ்.பல்கலை முன்றலில் போராட்டம்!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் மற்றும் மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது. நாடு முழுவதிலுமுள்ள அரச பல்கலைக்கழகங்களில் நடைபெற்றுவரும் தொடர்ச்சியான வேலைநிறுத்தத்தின் ஒரு பகுதியாக அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும், கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடாத்த அழைப்பு விடுக்கப்பட்டமைக்கமைய, இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ் பல்கலைக்கழக நுழைவாயிலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பல்வேறு விடயங்களை முன்வைத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
-

தமிழர் விடுதலைக் கூட்டணியின் நிர்வாகத்திற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!
தமிழர் விடுதலைக் கூட்டணியின் நிர்வாகத்திற்கு எதிரான வழக்கு எதிர்வரும் ஜூன் 19 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த பங்குனி மாதம் 16ம் திகதி இடம்பெற்ற தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுச்சபை கூட்டம் சட்டரீதியற்றது என தெரிவித்து தமிழர் விடுதலைக் கூட்டணியின் மத்தியகுழு உறுப்பினர்களான சுதாகரன் மற்றும் சூ.சூரியபிரபாவினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இன்றைய தினம் திங்கட்கிழமை குறித்த வழக்கானது வவுனியா மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்த போது, குறித்த வழக்கின் எதிராளிகள் நீதிமன்றத்தில் முன்னிலையாகாத…
-

சாவகச்சேரியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வார்ப்பு!
யாழ்.சாவகச்சேரியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி இன்று வழங்கப்பட்டது.சாவகச்சேரி நகர் பகுதியில் அமைந்துள்ள நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் அமரர் ந.ரவிராஜின் உருவச்சிலையடி வைத்து முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது. அதென்ன போது, இறுதி யுத்தத்தில் உயிரிழந்தவர்களை சுடர் ஏற்றி , மலர் தூபி அஞ்சலி செலுத்தினர். மேலும் முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி பவனியும் இடம்பெற்றது.
-

தென்னிலங்கை கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதி அமைப்பாளரை காணவில்லை!
தென்னிலங்கையில் உள்ள பிரதான கட்சிகளில் ஒன்றின் வட்டுக்கோட்டை தொகுதி அமைப்பாளரை கடந்த ஐந்து தினங்களாக காணவில்லை என அவரது மனைவி வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த திரிலோகநாதன் என்பவரே கடந்த ஐந்து நாட்களாக காணாமல் போயுள்ளதாக அவரது மனைவி தெரிவித்துள்ளார். அதேவேளை குறித்த கட்சியின் தீவக தொகுதி அமைப்பாளர் வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்தாக யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞனை ஏமாற்றி 09 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாயை மோசடி செய்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாண…
-

யாழில். போதைப்பொருளுடன் கைதான இளைஞன் பொலிஸ் காவலில் இருந்து தப்பியோட்டம்!
யாழ்ப்பாணத்தில் கஞ்சா போதைப்பொருளுடன் கைதாகிய இளைஞனை யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்திருந்த நிலையில் இளைஞன் தப்பியோடியுள்ளார். கஞ்சா போதைப்பொருளுடன் கைதான இளைஞனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைக்கு உட்படுத்தி வந்தனர். இந்நிலையில் குறித்த இளைஞன் பொலிஸ் நிலையத்தில் இருந்து தப்பி சென்றுள்ளார். தப்பி சென்ற இளைஞனை மீள கைது செய்வதற்கு பொலிஸார் தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.