Category: இலங்கை செய்திகள்

  • யாழ்.வந்த ஜனாதிபதிக்கு எதிராக போராட்டம்!

    யாழ்.வந்த ஜனாதிபதிக்கு எதிராக போராட்டம்!

    யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களால் ஜனாதிபதியின் யாழ்ப்பாண வருகைக்கு எதிராக கறுப்பு கொடி கட்டி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.   யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட கட்டிடமொன்றை திறந்துவைப்பதற்காக யாழ்ப்பாணம் வருகைதந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராகவே யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினரால் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது யாழ்ப்பாண பல்கலைக்கழக பிரதான வளாகம் மற்றும் மருத்துவபீட வளாகத்தில் கறுப்பு கொடிகள் கட்டப்பட்டு போராட்டம் நடத்தப்பட்டது. இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் சுமார் பன்னிரண்டாயிரம் பணியார்கள் தங்களுடைய சம்பள முரண்பாடு…

  • யாழில். மான்கொம்புடன் ஒருவர் கைது!

    யாழில். மான்கொம்புடன் ஒருவர் கைது!

    யாழ்ப்பாணத்திற்கு மான் கொம்பை கடத்தி வந்த நபர் ஒருவர் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.   கிளிநொச்சி பகுதியில் இருந்து நபர் ஒருவர் யாழ்ப்பாணத்திற்கு பேருந்தில் மானின் மண்டையோட்டு பகுதியுடன் மான் கொம்பை கடத்தி வருவதாக பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாண நகர் பகுதியை அண்மித்த பகுதியில் பேருந்தை வழிமறித்து சோதனையிட்டனர். அதன் போது மான் கொம்பு மீட்கப்பட்டதுடன் , அதனை கிளிநொச்சி பகுதியில் இருந்து கடத்தி வந்த…

  • யாழில்.வாள் வெட்டில் இளைஞன் படுகாயம் – பொலிஸ் உத்தியோகஸ்தருக்கும் தொடர்பு ?

    யாழில்.வாள் வெட்டில் இளைஞன் படுகாயம் – பொலிஸ் உத்தியோகஸ்தருக்கும் தொடர்பு ?

    யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவம் ஒன்றில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் தொடர்பு பட்டுள்ளது தெரியவந்துள்ளது.   தொல்புரம் பகுதியில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில் , வாள் வெட்டு சம்பவத்தில், பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரும் தொடர்பு பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

  • கொழும்பில் இருந்து யாழுக்கு பொதியில் அனுப்பப்பட்ட ஹெரோயின் – பெண் உள்ளிட்ட மூவர் கைது

    கொழும்பில் இருந்து யாழுக்கு பொதியில் அனுப்பப்பட்ட ஹெரோயின் – பெண் உள்ளிட்ட மூவர் கைது

    கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட பொதி ஒன்றினுள் போதைப்பொருளை மிக சூட்சுமமாக அனுப்பி வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பெண்ணொருவர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.   கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண்ணொருவருக்கு தனியார் நிறுவனம் ஒன்றின் பொதிகள் சேவைகள் ஊடாக, சேலை உள்ளிட்ட உடுப்புடவைகள் அடங்கிய பொதி ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குறித்த பொதியினுள் சூட்சுமமான முறையில் ஹெரோயின் போதைப்பொருளையும் மறைத்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினருக்கு…

  • யாழில். கடற்தொழிலுக்கு சென்றவர் கடலில் மயங்கி விழுந்து உயிரிழப்பு

    யாழில். கடற்தொழிலுக்கு சென்றவர் கடலில் மயங்கி விழுந்து உயிரிழப்பு

    யாழ்ப்பாணத்தில் கடற்தொழிலுக்கு சென்ற தொழிலாளி ஒருவர் நேற்றைய தினம் புதன்கிழமை கடலில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். அல்லைப்பிட்டி 3ஆம் வட்டாரத்தை சேர்ந்த 58 வயதுடைய அந்தோணிப்பிள்ளை றோமன் மெய்ன்ரன் என்பவரே உயிரிழந்துள்ளார். கட்டுமரமொன்றில் மீன் பிடிப்பதற்காக கடலுக்குள் சென்ற வேளை , கட்டுமரத்தில் இருந்து தவறி கடலினுள் விழுந்து உயிரிழந்துள்ளார். சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்திசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

  • யாழில். வீடு புகுந்து தாக்கிய குற்றத்தில் கனடா வாசிகள் இருவர் கைது

    யாழில். வீடு புகுந்து தாக்கிய குற்றத்தில் கனடா வாசிகள் இருவர் கைது

    யாழ்ப்பாணத்தில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்து வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் கனடாவில் இருந்து வந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றினுள் நேற்றைய தினம் திங்கட்கிழமை அத்துமீறி நுழைந்த இருவர் வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் , சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து ,விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார்  தாக்குதலாளிகள் இருவரையும் கைது செய்துள்ளனர்.…

  • இராணுவ வாகனம் மோதி யுவதி உயிரிழந்த சம்பவம் – இராணுவ சிப்பாய் விளக்கமறியலில்!

    இராணுவ வாகனம் மோதி யுவதி உயிரிழந்த சம்பவம் – இராணுவ சிப்பாய் விளக்கமறியலில்!

    யாழ்ப்பாணத்தில் இராணுவ வாகனம் மோதி யுவதி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இராணுவ வாகன சாரதியான இராணுவ சிப்பாய் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.   புத்தூர் – கனகம்புளியடி வீதியில் வீரவாணி சந்தியில் நேற்றைய தினம் திங்கட்கிழமை, இராணுவத்தினருக்கு சொந்தமான ஹயஸ் ரக வாகனம் வீதியோரமாக , வீதியை கடக்க துவிச்சக்கர வண்டியுடன் காத்திருந்த யுவதியை மோதி விபத்துக்கு உள்ளானதில் யுவதி உயிரிழந்திருந்தார். வாதரவத்தை பகுதியை சேர்ந்த சுதாகரன் சாருஜா (வயது 23) என்பவரே தனது 23ஆவது பிறந்தநாளான நேற்றைய…

  • யாழில். பொதுசுகாதார பரிசோதகர்களை உற்பத்தி நிலையத்தினுள் வைத்து பூட்டிய இருவர் கைது!

    யாழில். பொதுசுகாதார பரிசோதகர்களை உற்பத்தி நிலையத்தினுள் வைத்து பூட்டிய இருவர் கைது!

    யாழ்ப்பாணத்தில் உணவு உற்பத்தி மையம் ஒன்றினுள் வைத்து பொது சுகாதார பரிசோதகர்கள் இருவரை பூட்டி வைத்த குற்றச்சாட்டில் ஆணொருவரும் பெண்ணொருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.   பன்னாலை பகுதியில் இயங்கும் உணவு உற்பத்தி மையம் ஒன்றிற்கு சோதனை நடவடிக்கைக்காக நேற்றைய தினம் திங்கட்கிழமை இரண்டு பொது சுகாதார பரிசோதகர்கள் சென்றுள்ளனர். அதன்போது உற்பத்தி நிலையம் உரிய அனுமதிகள் பெறாது இயங்கி வந்ததமையும் , டெங்கு நுளம்பு பரவுவதற்கு ஏதுவான சூழலை கொண்டிருந்தமையும் சுகாதார பரிசோதகர்கள் கண்டறிந்துள்ளனர். அதன் போது,…

  • யாழில் துவிச்சக்கர வண்டியில் பயணித்தவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

    யாழில் துவிச்சக்கர வண்டியில் பயணித்தவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

    யாழ்ப்பாணத்தில் துவிச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்தவர் திடீரென மயங்கி விழுந்து நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை  உயிரிழந்துள்ளார். ஊரெழு கிழக்கை சேர்ந்த சிங்காரத்தினம் சசிக்குமார் (வயது 48) என்பவரே உயிரிழந்துள்ளார். சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

  • வடக்கு கிழக்கில் 20ஆம் திகதி வரையில் கனமழைக்கு வாய்ப்பு!

    வடக்கு கிழக்கில் 20ஆம் திகதி வரையில் கனமழைக்கு வாய்ப்பு!

    வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் எதிர்வரும் 20ஆம் திகதி வரையில் கனமழை கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியற்துறை மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.   கடந்த 13ம் திகதி இலங்கைக்கு தெற்கே வங்காள விரிகுடாவில் உருவாகிய காற்றுச் சுழற்சி தற்போது தீவிரமடைந்துள்ளது. இதனால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளுக்கும் தற்போது கிடைக்கும் மழை எதிர்வரும் 20ம் திகதி வரை தொடரும் வாய்ப்புள்ளது. குறிப்பாக 18,19 ம் திகதிகளில்…