Category: இலங்கை செய்திகள்
-

யாழில். தமிழ் பொலிசாரை கட்டாயப்படுத்தி பிரித் ஓத வைத்த பொலிஸ் உயர்மட்டம்!
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பகுதியில் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ள கெமுனு விகாரையில் நடைபெற்ற வெசாக் வழிபாட்டிற்காக தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தர்களை கட்டாயப்படுத்தி அழைத்து செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. காங்கேசன்துறை குமார கோவில் வளாகத்தில் கெமுனு விகாரை அமைக்கப்பட்டுள்ளது. உயர் பாதுகாப்பு வலயமாக இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்குள் குமார கோவில் இருந்தவேளை, ஆலயத்திற்கு முன்பாக இராணுவத்தினரால் கெமுனு விகாரை எந்தவிதமான அனுமதிகளும் பெறப்படாது நிர்மாணிக்கப்பட்டது. தற்போது குறித்த பகுதிகள் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டு அப்பகுதி மக்கள் மீள்குடியேறி குமார கோவிலில் பூஜை…
-

யாழ்.போதனா வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களுடன் முரண்பட்ட மூவர் கைது
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைய முற்பட்டு , பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களுடன் முரண்பட்ட குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்கள் நேற்றைய தினம் சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருபவரை பார்வையாளர் நேரம் அல்லாத நேரத்தில் மூவரும் பார்வையிட செல்ல முற்பட்ட வேளை , பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் அனுமதிக்கவில்லை. அதனால் மூவரும் உத்தியோகஸ்தர்களுடன் முரண்பட்டு , வைத்தியசாலைக்கு அத்துமீறி நுழைய முற்பட்டுள்ளனர். அது தொடர்பில் வைத்தியசாலை நிர்வாகத்தினரால்,யாழ்ப்பாண பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து ,…
-

பொது வேட்பாளரை நிறுத்த கூடிய ஒற்றுமை தமிழர்களிடம் இல்லை!
பொது வேட்பாளரை நிறுத்த கூடிய ஒற்றுமை தமிழ் மக்கள் மத்தியில் இல்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தன்னிடம் தெரிவித்ததாக , நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள விக்னேஸ்வரனின் இல்லத்திற்கு நேற்றைய தினம் சனிக்கிழமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேரில் சென்று சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார். குறித்த சந்திப்பு தொடர்பில் விக்னேஸ்வரன் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஜனாதிபதியின் நிகழ்வுகளுக்கு என்னால் செல்ல முடியவில்லை. அதனால் அவர் என்னை வீடு தேடி வந்து…
-

தமிழர்களின் வாக்குகளை பெறவே வடக்குக்கு ஜனாதிபதி வந்துள்ளார்!
தமிழ் மக்களின் வாக்குகளை பெறும் நோக்கிலேயே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வடக்கிற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளதாக, ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் ஊடகப்பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார். ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் கிளிநொச்சி மாவட்டத்திற்கான நிர்வாக தெரிவு, கூட்டுறவாளர் மண்டபத்தில் நேற்று நடைபெற்ற கூட்டத்திலேயே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது, யுத்தம் முடிந்த பின்னரும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் இதுவரை தீரக்கப்படாமல் உள்ளதாக அவர் குற்றஞ்சாட்டினார். இந்நிலையில், ஜனாதிபதியின் வடக்கின் விஜயம் தமிழ் மக்களின் வாக்குகளை…
-

கல்வியில் சீர் திருத்தம் வேண்டும் – வடக்கு பட்டதாரிகளை ஒன்றிணைத்து பாரிய போராட்டத்தை முன்னெடுப்போம்!
வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளுக்கு அரச வேலைகளை விரைந்து தர நடவடிக்கை எடுக்கப்படாவிடின், வடக்கில் உள்ள அனைத்து வேலையற்ற பட்டதாரிகளையும் ஒன்றிணைத்து பாரிய போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளதாக வடமாகாண பட்டதாரிகள் சங்க ஊடக பேச்சாளர் கிருஸ்ணராஜா டனிசன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். நாங்கள் பட்டப்படிப்பை முடித்து 3 வருடங்களுக்கு மேலாகி விட்டது. ஆனாலும் எமக்கான வேலை வாய்ப்புக்களை இன்னமும் கிடைக்கப்பெறவில்லை. இது தொடர்பில் எமது…
-

யாழில். வாங்கிய றோலுக்குள் இரும்பு கம்பித்துண்டு!
யாழ்ப்பாணம் மருதனார்மடம் பகுதியில் உள்ள வெதுப்பாக உற்பத்தி பொருட்களை விற்பனை செய்யும் கடையொன்றில் வாங்கிய றோல் ஒன்றினுள் சுமார் 4 இன்ச் அளவு நீளமுடைய கறல் ஏறிய கம்பிதுண்டு ஒன்று காணப்பட்டுள்ளது. நபர் ஒருவர் குறித்த கடையில் 80 ரூபாய் வீதம் 10 றோல்களை கொள்வனவு செய்து , தனது உறவினர் வீட்டுக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு றோல்களை பரிமாறி சாப்பிட்ட வேளை றோல் ஒன்றினுள் கம்பி துண்டு காணப்பட்டுள்ளது. இது தொடர்பில் சுகாதார பரிசோதகருக்கு…
-

யாழில். மாமன் – மருமகனுக்கு இடையில் மோதல் – தடுக்க சென்ற மச்சான் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழப்பு!
தனது தந்தைக்கும் மச்சானுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலை தடுக்க சென்ற இளைஞன் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் – தாவடி பகுதியை சேர்ந்த 23 வயதுடைய வரதராசா நியூட்சன் எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார். கடந்த 2ஆம் திகதி இளைஞனின் தந்தைக்கும் , இளைஞனின் அக்காவின் கணவருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டு , கைக்கலப்பாக மாறியுள்ளது. அதனை அவதானித்த இளைஞன் இருவருக்கும் இடையிலான மோதலை தடுக்க முற்பட்ட வேளை அக்காவின் கணவரின் கத்திகுத்துக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்த இளைஞனை…
-

யாழ்ப்பாணம் – தீவங்களுக்கு இடையிலான படகு சேவைகள் இரத்து!
வடக்கில் கடல் கொந்தளிப்பாக காணப்படுவதனால் , யாழ்ப்பாணம், குறிகாட்டுவான் பகுதியில் இருந்து தீவுகளுக்கு செல்லும் படகு சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. குறிகாட்டுவான் – நயினாதீவுக்கான படகு சேவைகள் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டு நடைபெறுகிறது. குறிகாட்டுவான் இறங்குதுறையில் இருந்து நெடுந்தீவு , எழுவைதீவு மற்றும் அனலைதீவு ஆகிய பகுதிகளுக்கான படகு சேவைகளே இரத்து செய்யப்பட்டுள்ளன. அதேவேளை நயினாதீவுக்கான படகு சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டு, பயணிகளுக்கான பாதுகாப்பு அங்கிகள் வழங்கப்பட்டு பாதுகாப்பான பயண சேவைகள் இடம்பெறுகின்றன. வெள்ளிக்கிழமை ஆகையால் நயினாதீவு நாக…
-

யாழ்.மாநகர சபையின் அனுமதியின்றி இராணுவத்தினரால் ஆரியகுளத்தினுள் அலங்காரம்!
யாழ்ப்பாணம் ஆரியகுளம் பகுதியில், மாநகர சபையின் அனுமதியின்றியே வெசாக் அலங்காரங்களை இராணுவத்தினர் செய்துள்ளதாக மாநகர சபை ஆணையாளர் கிருஷ்னேந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் நாக விகாரைக்கு அருகில் உள்ள ஆரியகுளம் பகுதியில் வெசாக்கினை முன்னிட்டு , இராணுவத்தினரால் வெசாக் அலங்காரம் மற்றும் வெளிச்சக்கூடுகள் , மின் விளக்கு அலங்காரங்கள் என்பவை செய்யப்பட்டுள்ளன. இதற்கான அனுமதிகள் எவையும் மாநகர சபையிடம் பெறாமல் அடாத்தாக இராணுவத்தினர் செய்துள்ளதாக ஆணையாளர் தெரிவித்துள்ளார். அதேவேளை மாநகர சபை ஆட்சி காலத்தில் ஆரிய குளப்பகுதியில்…
-

விபத்தில் சிக்கி படுகாயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!
விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கிளிநொச்சியை சேர்ந்த நபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியை சேர்ந்த தம்பிராசா ரவிசந்திரன் (வயது 35) என்பவரே உயிரிழந்துள்ளார். கனகபுரம் பகுதியில் கடந்த 17ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை…