Category: இலங்கை செய்திகள்
-

2ம் சங்கிலியனின் 405வது சிரார்த்ததினம்!
யாழ்ப்பாண இராச்சியத்தின் கடைசி மன்னனான 2ம் சங்கிலியனின் 405வது சிரார்த்ததின அனுஷ்டிப்பும், நினைவுதினவிழாவும் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழில் இடம்பெற்றது. இலங்கை சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானத்தம் தலமையில் யாழ் நல்லூர் முத்திரைச் சந்தியில் அமைந்துள்ள சங்கிலிய மன்னன் சிலையடியில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது சங்கிலிய மன்னன் சிலைக்கு மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. இன் நிகழ்வில் அகில இலங்கை இந்துமாமன்றத்தின் உபதலைவர் ஆறுதிருமுருகன்,யாழ் மாநகர ஆணையாளர்,சமய பெரியோர்கள்ர், வர்த்தகர்கள் ஊர் மக்கள்…
-

யாழில் மாணவிகளுடன் துர்நடத்தை – ஆசிரியருக்கு கற்பிக்க தடை!
யாழ்ப்பாணத்தில் 10 வயது மாணவிகளுடன் துர்நடத்தையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ஆசிரியருக்கு வடமாகாண கல்வி அமைச்சினால் பணித்தடை விதிக்கப்பட்டுள்ளது. மானிப்பாய் பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் தரம் 05 இல் கல்வி கற்கும் 10 வயதான மாணவிகளுடன் ஆசிரியர் ஒருவர் தவறாக நடந்து கொண்டதாக பாதிக்கபப்ட்ட மாணவி ஒருவரின் பெற்றோர் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததன் அடிப்படையில் , பொலிஸார் ஆசிரியரை கைது செய்து மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தினர். ஆசிரியர் தற்போது…
-

யாழில். மருத்துவ சிகிச்சைக்கு சென்றுவிட்டு, வீடு திரும்பிக்கொண்டிருந்த பெண் விபத்தில் சிக்கி உயிரிழப்பு!
கணவருடன் மருத்துவ சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு சென்று, வீடு திரும்பிக்கொண்டிருந்த குடும்ப பெண் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் – பண்டத்தரிப்பு பகுதியில் நேற்றைய தினம் புதன்கிழமை குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் அப்பகுதியை சேர்ந்த 61 வயதான சரோஜினி தேவி அல்பேர்ட் வில்லியம் என்பவரே உயிரிழந்துள்ளார் குறித்த குடும்பப்பெண் கடந்த சில தினங்களாக சுகவீனமடைந்திருந்த நிலையில் நேற்றைய தினம் கணவனுடன் துவிச்சக்கர வண்டியில் மருத்துவ சிகிச்சைபெற அருகில் உள்ள வைத்தியசாலைக்கு சென்றுள்ளார். சிகிச்சை பெற்றுக்கொண்டு…
-

யாழில். கடற்படையினருக்கு காணி சுவீகரிக்க முயற்சி – மக்களின் எதிர்ப்பால் அளவீட்டு பணி நிறுத்தம்!
யாழ்ப்பாணத்தில் கடற்படை முகாமிற்காக காணி சுவீகரிப்பதற்கான நில அளவை பணிகள் மக்கள் போராட்டத்தால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. சுழிபுரம் காட்டுப்புலம் பகுதியில் உள்ள 04 பரப்பு தனியார் காணியினை கடற்படை முகாம் அமைப்பதற்காக சுவீகரிக்க முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது, அதன் ஒரு கட்டமாக இன்றைய தினம் வியாழக்கிழமை குறித்த காணியினை நில அளவை செய்வதற்காக நில அளவை திணைக்கள உத்தியோகஸ்தர்கள் காணிக்கு வருகை தந்த போது , அங்கு கூடியிருந்த மக்களின் எதிர்ப்பினால் அவர்கள் காணி அளவீட்டு பணிகளை…
-

புத்தகப்பையில் கசிப்பு கடத்தி வந்தவர் யாழில் கைது!
கிளிநொச்சி பகுதியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு பாடசாலை மாணவர்களுக்கான புத்தகப்பையில் கசிப்பு பொதிகளை கடத்தி வந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். 30 லீட்டர் கசிப்பினை மூன்று புத்தகப்பைகளில் கடத்தி வந்த 25 வயதுடைய இளைஞனே கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த இளைஞன் பேருந்தில் கசிப்பு கடத்தி வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையிலே இளைஞனை கைது செய்துள்ளதாகவும், விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
-

யாழில். காணி சுவீகரிப்பு முயற்சிகளை நிறுத்தமாறு அறிவுறுத்தல்!
படைத் தரப்பினருக்காக காணிகளை சுவீகரிக்கும் நோக்கிலான அனைத்து காணி அளவீடுகளையும் தற்காலிகமாக நிறுத்துமாறு யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. யாழ் மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயே அமைச்சரினால் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு குறித்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. பொன்னலை, திருவடி நிலை பகுதியில் தனியார் காணியில் நிலை கொண்டிருக்கும் கடற்படையினருக்கு குறித்த காணியை சட்ட ரீதியாக வழங்குவதற்கான அளவீட்டு பணிகள் மேற்கொள்வதற்கான முயற்சிகள்…
-

பொது வேட்பாளர் விடயத்தை சுமந்திரன் குழப்புகிறார்!
ஜனாதிபதி தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்குவது தொடர்பில் இடம்பெற்றுவரும் முன்னெடுப்புக்களை சுமந்திரன் குழப்பியடிக்கின்றார் என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றம் சாட்டியுள்ளார். யாழில். இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே அவ்வாறு தெரிவித்தார். தமிழ் பொது வேட்பாளர் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரனின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் கருத்து பரிமாற்ற நிகழ்வு நடைபெறவுள்ளமை தொடர்பில் கேட்ட போதே அவ்வாறு தெரிவித்தார். தமிழ்ப் பொது வேட்பாளர் தொடர்பான இந்தக் கூட்டத்துக்கு…
-

வவுனியாவில் 80 போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது!
வவுனியாவில் 80 போதை மாத்திரைகளுடன் 20 வயது இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார், வவுனியா குருமன்காடு பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கை ஒன்றின் போது, இளைஞர் ஒருவரிடம் இருந்து 80 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டன. இதனையடுத்து குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டதுடன், அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் வியாபார நோக்கில் குறித்த போதை மாத்திரைகளை வவுனியா, குருமன்காடு பகுதிக்கு கொண்டு வந்துள்ளமை தெரியவந்துள்ளது. வவுனியா, பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த 20 வயது இளைஞரே கைது…
-

யாழில். மாணவிகளை தாக்கிய குற்றத்தில் கைதான அருட்சகோதரிக்கு பிணை!
யாழில்.மாணவிகளை தாக்கிய குற்றச்சாட்டில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அருட்சகோதரி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். ஊர்காவற்துறை பகுதியில் உள்ள பாடசாலை விடுதியில் தங்கி கல்வி கற்று வந்த தம்மை விடுதிக்கு பொறுப்பான அருட்சகோதரி அடித்து துன்புறுத்தியதாக கூறி நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை விடுதியில் இருந்த மாணவிகள் 11 பேர் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தனர். அதனை அடுத்து மாணவிகளை யாழ்,போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரியின் முன் முற்படுத்திய வேளை மாணவிகளின் உடலில் தழும்புகள் இருந்தமை கண்டறியப்பட்டது. அது…
-

யாழ். போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியவர் விளக்கமறியலில்!
யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்து , ஊழியர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைதானவரை எதிர்வரும் 11ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை இரவு 10 மணியாலில் கையில் காயமடைந்த நபர் ஒருவரை தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு , அத்துமீறி வைத்தியசாலை வளாகத்தினுள் நுழைந்து, வைத்தியசாலை கட்டடத்திற்குள் மோட்டார் சைக்கிளை செலுத்தி சென்று அவசர சிகிச்சை பிரிவின் வாயிலில் , காயமடைந்த நபரை இறக்கி விட்டுள்ளார். அதன் போது…