Category: இலங்கை செய்திகள்

  • யாழில். முச்சக்கர வண்டிக்குள் இருந்த கைபேசி திருட்டு – இருவர் கைது!

    யாழில். முச்சக்கர வண்டிக்குள் இருந்த கைபேசி திருட்டு – இருவர் கைது!

    யாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டி ஒன்றில் இருந்து கையடக்க தொலைபேசியை திருடிய குற்றச்சாட்டில் ஒருவரும் , அதனை வாங்கிய நபர் ஒருவருமாக இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்   யாழ், நீதிமன்ற கட்டட தொகுதிக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியினுள் பூட்டி பாதுகாப்பாக வைத்திருந்த சுமார் ஒரு இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய் பெறுமதியான கையடக்க தொலைபேசியை , துவிச்சக்கர வண்டி ஒன்றில் வந்த நபர் ஒருவர் களவாடி சென்று இருந்தார். கையடக்க தொலைபேசி களவாடப்பட்டமை தொடர்பில்…

  • படுகொலை செய்யபட்ட ஊடகவியலாளர் நடேசனின் நினைவேந்தல்!

    படுகொலை செய்யபட்ட ஊடகவியலாளர் நடேசனின் நினைவேந்தல்!

    படுகொலை செய்யபட்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 20 ஆவது ஆண்டு நினைவேந்தல் யாழ் ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது   யாழ்ப்பாணம் பிரதான வீதி, நீதிமன்ற கட்டடத் தொகுதிக்கு முன்பாக உள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான பொது நினைவுத்தூபியில் இவ் நினைவேந்தல் நிகழ்வு யாழ்ஊடக அமையத்தின் தலைவர் கு.செல்வகுமார் தலைமையில் இடம்பெற்றது. இதன் பொழுது படுகொலை செய்யபட்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் நினைவுருவபடத்திற்கு, உதயன் குழும தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ஈஸ்வரபாதம் சரவணபவனால்…

  • கவுணாவத்தை வைரவர் ஆலய வேள்வி !

    கவுணாவத்தை வைரவர் ஆலய வேள்வி !

    யாழ்ப்பாணம் கீரிமலை கவுணாவத்தை நரசிங்க வைரவர் ஆலய வேள்வி இன்றைய தினம் சனிக்கிழமை காலை இடம்பெற்றது. இன்றைய வேள்வியில் நூற்றுக்கணக்கான ஆடுகள் பலியிடப்பட்டன. வேள்வியை முன்னிட்டு, நேற்றைய தினம்வெள்ளிக்கிழமை இரவு, வேள்வி ஆடுகளை வளர்த்தவர்கள் அவற்றை பொதுமக்களுக்கு காட்சி படுத்தி , அதிகாலை வேளை ஆலயத்திற்கு ஆடுகளை கொண்டு சென்று ,  பொங்கல் வழிபாடுகள் ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆடுகள் பலி கொடுக்கப்பட்டன. வெளிநபர்கள் ஆடுகள் பலி கொடுக்கப்படுவதை பார்க்க முடியாதவாறு ஆலய வாயிலில் பாதுகாப்பான கூடம் அமைக்கப்பட்டு…

  • யாழில் கணவன் – மனைவி மீது தாக்குதல் – நகைகள், பணம் என்பவை கொள்ளை!

    யாழில் கணவன் – மனைவி மீது தாக்குதல் – நகைகள், பணம் என்பவை கொள்ளை!

    வியாபார நடவடிக்கைகளை முடித்து விட்டு வீடு திரும்பிய வர்த்தகரை , வீட்டிற்கு அருகில் வைத்து தாக்கி ஒரு தொகை பணத்தை கொள்ளையிட்டதுடன் , வர்த்தகரின் மனைவியை தாக்கி அவரது நகைகளையும் கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளனர்   யாழ்ப்பாணம் – உடுப்பிட்டி பகுதியில் இன்றைய தினம் சனிக்கிழமை அதிகாலை நடைபெற்ற இச் சம்பவத்தில் அப்பகுதியை சேர்ந்த 42 வயதுடைய குணசிங்கம் சந்துரு என்பவரே தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார் குறித்த நபர் தனது வியாபாரங்களை முடித்துக்கொண்டு , வீடு திரும்பிய வேளை…

  • பொது நூலகம் எரிக்கப்பட்டு 43 வருடங்கள் நிறைவு!

    பொது நூலகம் எரிக்கப்பட்டு 43 வருடங்கள் நிறைவு!

    தென்கிழக்காசியாவின் பெரிய நூலகமான யாழ் பொது நூலகம் எரிக்கப்பட்டு இன்றுடன் 43 வருடங்கள் நிறைவு.   தென்கிழக்காசியாவின் மிகப் பெரிய நூலகமாக திகழ்ந்த யாழ் பொது நூலக எரிப்பு இடம்பெற்று இன்றுடன் 43ஆவது ஆண்டுகள் கடந்துள்ளதனை நினைவு கூரும் நினைவேந்தல் யாழ்.பொது நூலகத்தில் இன்று இடம்பெற்றது. யாழ் மாநகர சபையின் ஆணையாளர் ச.கிருஷ்ணேந்திரன் தலைமையில் நடைபெற்ற நினைவேந்தலில் யாழ் பொது நூலகத்தின் பிரதம நூலகர் சிவகரன் அனுசியா ,நூலக ஊழியர்கள் பொதுமக்கள் கலந்துகொண்டனர். இதன்போது நூலகம் எரிக்கப்பட்டபோதும்…

  • நான் பொது வேட்பாளருக்கு மாறானவன்!

    நான் பொது வேட்பாளருக்கு மாறானவன்!

    மக்களை உசுப்பேத்தி எதுவும் செய்யலாம் என யாராவது நினைத்தால் , அது நடக்காது. மக்கள் தங்களுக்கு எது சரி என்பதை அவர்களே தீர்மானிப்பார்கள். சரியென்றால் ஏற்றுக் கொள்வார்கள் இல்லையென்றால் விலக்கி வைப்பார்கள் என வடமாகாண சபை அவைத்தலைவர் சி, வி கே சிவஞானம் தெரிவித்துள்ளார்.   யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். நான் பொது வேட்பாளருக்கு மாறானவன். பொது வேட்பாளர் தேவையற்றது என அரசியல்வாதிகளுக்குள்ளேயே முதன் முதலில்…

  • எதிர்ப்புக்களை மீறி தையிட்டி விகாரைக்கு அருகில் புதிய கட்டடம் – மூடி மறைக்க முயற்சித்த யாழ்.மாவட்ட பதில் செயலர்!

    எதிர்ப்புக்களை மீறி தையிட்டி விகாரைக்கு அருகில் புதிய கட்டடம் – மூடி மறைக்க முயற்சித்த யாழ்.மாவட்ட பதில் செயலர்!

    யாழ்ப்பாணம் தையிட்டி பகுதியில் சட்டவிரோதமான முறையில் தனியார் காணிகளை கையகப்படுத்தி , விகாரை அமைக்கப்பட்டுள்ள நிலையில் விகாரையை அண்மித்த பிறிதொரு தனியாரின் காணியில் மற்றுமொரு சட்ட விரோத கட்டடம் ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது.   தையிட்டி பகுதியில் பொதுமக்களின் காணிகளை அடாத்தாக கையகப்படுத்தி சட்டவிரோதமான முறையில் விகாரை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது குறித்த விகாரையை அகற்றி, காணிகளை காணி உரிமையாளர்களிடம் கையளிக்க வேண்டும் என கடந்த ஒரு வருட காலமாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் விகாரை அமைந்துள்ள…

  • ஜனாதிபதி சித்து விளையாட்டுக்களில் ஈடுபடுகிறார்!

    ஜனாதிபதி சித்து விளையாட்டுக்களில் ஈடுபடுகிறார்!

    ரணில் விக்கிரமசிங்கவின் சித்து விளையாட்டு இம்முறை சரிவராது என தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் ராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.   யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். இம்முறை தேர்தலில் தாம் மக்களால் மிரட்டியடிக்கப்படுவேன் என்ற சந்தேகத்தில் ரணில் விக்கிரமசிங்க  சித்து விளையாட்டுகளை செய்து வருகின்றார். நாட்டை வாங்குரோத்தாக்கிய ரணில், ராஜபக்ச அரசாங்கம் மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவதற்காக முயல்கின்றனர். உண்மையிலே ஜனாதிபதி தேர்தலுக்கு ஐக்கிய தேசியக் கட்சி பயப்படுகிறது என மேலும்…

  • யாழில். புகைத்தலுக்கு எதிராக போராட்டம்!

    யாழில். புகைத்தலுக்கு எதிராக போராட்டம்!

    சர்வதேச புகைத்தல் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு புகைத்தல் மற்றும் போதைப்பொருள் பாவனைக்கு எதிரான போராட்டம் ஒன்று இன்றைய தினம் வெள்ளிக்கிழமை  சங்கானை பேருந்து நிலையத்துக்கு முன்னால் இடம்பெற்றது.   இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ‘அழகான இளைஞர்களின் உடல் அழகையும் முகத்தின் வசீகரத்தையும் சிதைக்கும் போதைப்பொருள் பாவனைக்கு ஏமாறமாட்டோம்’, ‘எமது பிள்ளைகளை புகையிலைக் கம்பனிகளிடமிருந்து பாதுகாக்க அனைவரும் அணிதிரள்வோம்’, ‘புகைப்பதால் உன் அழகு புன்னகை இழக்கும்’, ‘உடலை உருக்கும் சிகரெட் பாவனை எதற்கு?’, ‘சினிமாவில் புகைப்பதை பார்த்து உன்…

  • யாழ் – தீவுகளுக்கு இடையிலான அம்புலன்ஸ் படகு சேவை கைவிடப்பட்டுள்ளது!

    யாழ் – தீவுகளுக்கு இடையிலான அம்புலன்ஸ் படகு சேவை கைவிடப்பட்டுள்ளது!

    யாழ்ப்பாணம் மற்றும் தீவுகளுக்கு இடையிலான அம்புலன்ஸ் படகு  சேவை நிறுத்தப்படவுள்ளதாக கியூமெடிக்கா தொண்டு நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த படகுச்சேவையானது கடந்த 2006 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தரைப்பாதை இல்லாத நயினாதீவு , நெடுந்தீவு , எழுவை தீவு மற்றும் அனலைதீவு ஆகிய தீவுகளுக்கும் குறிகாட்டுவான் இறங்குதுறைக்கும் இடையில் சேவையில் ஈடுபட்டு வந்தன பொருளாதார நெருக்கடி மற்றும் பராமரிப்புச் செலவுகள் காரணமாகவே குறித்த சேவையினை நிறுத்தவுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. படகு சேவை நிறுத்தப்பட்டமை தொடர்பில்,  யாழ்பாணத்தில் இடம்பெற்றுள்ள…