Category: இலங்கை செய்திகள்
-

யாழில். பட்டப்பகலில் வீடுடைத்து கொள்ளை – ஒருவர் கைது!
யாழ்ப்பாணத்தில் கொள்ளை கும்பல் ஒன்றினால் வீடொன்று உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த நகை பணம் என்பவை கொள்ளையடிக்கப்பட்டுள்ளதுடன் , வீட்டில் இருந்த பெறுமதியான பொருட்களும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. வட்டுக்கோட்டை பகுதியில் இன்றைய தினம் வியாழக்கிமை மதியம் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, வீட்டில் இருந்தவர்கள், வெளியே சென்றிருந்த வேளை , வீட்டினுள் அத்துமீறி ஆயுதங்களுடன் நுழைந்த கொள்ளை கும்பல், வீட்டின் கதவுகளை உடைத்து, வீட்டினுள் புகுந்து இரண்டு இலட்சத்து 11 ஆயிரம் ரூபாய் பணம் ,…
-

எனது சகோதரியும் காணாமலாக்கப்பட்டவரே!
எனது சகோதரியும் காணமலாக்கப்பட்டவர் தான். எனக்கு அதன் வலி தெரியும். நாம் ஆட்சிக்கு வந்து அதற்கொரு தீர்வை காண்போம் என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுர குமார திஸாநாயக்க இந்து சமய தலைவர்களிடம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள அனுர குமார திஸாநாயக்க தலைமையிலான குழுவினர் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை நல்லை திருஞான சம்பந்தர் ஆதீனத்திற்குச் சென்று சந்திப்பில் ஈடுபட்டனர். சந்திப்பில் நல்லை ஆதீன குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த…
-

காணாமலாக்கப்பட்டோர் பிரச்சினைக்காக குரல் கொடுப்போம்!
யுத்தம் நடந்த பிரதேசத்தில் காணாமலாக்கப்பட்டோர் பிரச்சினை தொடர்பில் எந்த நடவடிக்கையும் முன்னெடுக்க படவில்லை. அதற்காக நாம் தொடர்ந்து குரல் கொடுப்போம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரான் விக்கிரமரட்ண தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். யாழ் நகரின் தீவு பகுதியியின் போக்குவரத்து,மக்களின் கல்வி நிலை அடிப்படை வசதிகளில் ஒன்றான தண்ணீர் பிரச்சினை இன்றும் இந்த ஆட்சியில் தொடர்ந்து கொண்டிருக்கிறது. யுத்தம் நடந்த பிரதேசம் காணாமலாக்கபட்டவர்…
-

அனலைதீவில் கடற்தொழிலுக்கு சென்ற இருவரை காணவில்லை!
யாழ்ப்பாணம் அனலைதீவு பகுதியில் இருந்து கடற்தொழிலுக்கு சென்ற இரு தொழிலாளிகளை காணவில்லை என குடும்பத்தினர் முறையிட்டுள்ளனர். அனலைதீவு பகுதியை சேர்ந்த திருச்செல்வம் மைக்கல் பெர்னாண்டோ மற்றும் நாகலிங்கம் விஜயகுமார் ஆகிய இருவரும் கடந்த 10ஆம் திகதி மாலை படகொன்றில் கடற்தொழிலுக்கு சென்ற நிலையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை வரையில் கரை திரும்பவில்லை என தெரிவிக்கப்படுகிறது. காணாமல் போன இரு கடற்தொழிலாளர்களையும் ஊரவர்கள் கடலில் தேடி வருவதுடன் , கடற்படையினரிடம் முறையிட்டுள்ள நிலையில் கடற்படையினரும் தேடுதல் நடவடிக்கையில்…
-

யாழில் தெருவோர கடைகளுக்கு 35 ஆயிரம் தண்டம்!
யாழ்ப்பாணம், திருநெல்வேலி மற்றும் கொக்குவில் பகுதிகளில் சுகாதாரச் சீர்கேட்டுடன் இயங்கிய உணவு கையாளும் நிலையங்களுக்கு நீதிமன்றத்தால் 35ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மற்றும் கொக்குவில் பிரதேசங்களில் கடந்த மாதம் 29ஆம் திகதி இரவு தெருவோர வியாபார நிலையங்களை பொது சுகாதார பரிசோதகர்கள் சோதனைக்கு உட்படுத்தினர். இதன்போது மருத்துவ சான்றிதழ் இன்றி உணவை கையாண்டமை, தனிநபர் சுகாதாரம் இன்றி உணவை கையாண்டமை போன்ற அடிப்படை சுகாதார வசதிகள் கூட இல்லாமல் சில வியாபார நிலையங்கள் இயங்கியமை பரிசோதனையில்…
-

இயக்க வேறுபாடுகளின்றி மறைந்த அனைத்து தலைவர்களுக்கும் சிலை அமைப்பேன்!
எதிர்காலத்தில் கட்சி மற்றும் இயக்க வேறுபாடுகள் இன்றி, ஈழப் போராட்டத்தினை முன்னெடுத்த அனைத்து தலைவர்களுக்கு சிலைகளை அமைக்க நடவடிக்கை எடுப்பேன் என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். ஈழப் போராட்ட வரலாற்றில் உயிர் தியாகம் செய்த முதல் போராளி பொன் சிவகுமாரனின் 50 ஆவது ஆண்டு நினைவு இன்றைய தினம் , யாழ்ப்பாணம் உரும்பிராய் சந்தியில் அமைந்துள்ள சிவகுமாரனின் நினைவு சதுக்கத்தில் இடம்பெற்றது. நிகழ்வில் திருவுருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து , சுடரேற்றி…
-

பொன். சிவகுமாரனின் 50ஆவது ஆண்டு நினைவு தினம்!
தியாகி பொன் சிவகுமாரன் அவர்களது 50 ஆவது நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் நினைவு கூரப்பட்டது. உரும்பிராயில் உள்ள பொன் சிவகுமாரனின் நினைவிடத்தில் இன்றைய தினம் புதன்கிழமை காலை இடம்பெற்ற நினைவேந்தலில் ஈகைச்சுடரினை பொன் சிவகுமாரனின் சகோதரி ஏற்றிவைத்ததுடன் அகவணக்கமும், மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது. இவ் அஞ்சலி நிகழ்வில் அரசியல் கட்சி பேதமற்று பலரும் கலந்து கொண்டனர். கடற்றொழில் அமைச்சரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா, இலங்கை தமிழ் அரசுக் கட்சியின்…
-

புங்குடுதீவு பாலம் இன்று புதன்கிழமை இரவு மூடப்படுகிறது!
புங்குடுதீவு பாலம் திருத்த வேலைகளுக்காக இன்றைய தினம் புதன்கிழமை இரவு 08 மணி முதல் மறுநாள் வியாழக்கிழமை அதிகாலை வரையில் மூடப்பட்டு இருக்கும் என வேலணை பிரதேச சபை அறிவித்துள்ளது.
-

யாழில். போதைக்கு அடிமையான மகனை மீட்டு தருமாறு தாய் பொலிஸாரிடம் முறையீடு!
போதைக்கு அடிமையான மகனை , போதைப்பழக்கத்தில் இருந்து மீட்டு தருமாறு தாயார் கோரியதை அடுத்து, இளைஞனை மீட்டு நீதிமன்றின் ஊடாக புனர்வாழ்வு முகாமிற்கு பொலிஸார் அனுப்பி வைத்துள்ளனர். மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் தாயொருவர் , தனது மகன் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளார். அவரை அந்த பழக்கத்தில் இருந்து மீட்டு தருமாறு மானிப்பாய் பொலிசாரிடம் கோரியுள்ளார். அதனை அடுத்து இளைஞனை கைது செய்த பொலிஸார் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தி , நீதிமன்றின் ஊடாக…
-

தென்மராட்சி சந்தையில் மண்ணுடன் விற்பனை ஆகும் கரட்!
சந்தையில் கரட்டை கழுவி விற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளமையால் , மண்ணுடன் கரட் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தென்மராட்சி பிரதேச சந்தையில் மண்ணுடன் கரட் விற்பனை செய்யப்படுவதால் , அது தொடர்பில் வியாபாரிகளிடம் கேட்ட போது , ” தம்புள்ளை சந்தையில் இருந்து வரும் கரட் மண்ணுடன் தான் வரும். அவற்றினை சந்தையில் உள்ள குழாய் நீரில் கழுவிய இதுவரை காலம் விற்பனை செய்து வந்தோம். தற்போது குழாய் நீரில் கரட் கழுவ தடை விதிக்கப்பட்டுள்ளமையால் ,…