Category: இலங்கை செய்திகள்

  • யாழ்.இந்திய துணைத்தூதரகத்தை முற்றுகையிடவுள்ள கடற்தொழிலாளர்கள்!

    யாழ்.இந்திய துணைத்தூதரகத்தை முற்றுகையிடவுள்ள கடற்தொழிலாளர்கள்!

    இந்திய இழுவை மடி படகுகளின் அத்துமீறல் செயற்பாட்டை தடுத்து நிறுத்த கோரி நாளையதினம் செவ்வாய்க்கிழமை  யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளதாக யாழ்ப்பாண கடற்றொழிலாளர் பிரதிநிதிகள் அறிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்தின் அலுவலகத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தனர். இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை தடுத்து நிறுத்தி, எமக்கு விரைவில் தீர்வினை பெற்று தராது விட்டால் நாங்கள் நாடாளுமன்றை முற்றுகையிட்டு போராடுவோம்…

  • வடக்கில் காற்றின் வேகம் அதிகரிக்கும்!

    வடக்கில் காற்றின் வேகம் அதிகரிக்கும்!

    மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.   மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. . இதேவேளை, புத்தளத்தில் இருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக…

  • மட்டக்களப்பில் பெண் மீது துப்பாக்கி சூடு – ஒருவர் கைது!

    மட்டக்களப்பில் பெண் மீது துப்பாக்கி சூடு – ஒருவர் கைது!

    மட்டக்களப்பு காத்தான்குடி பகுதியில் பெண்ணொருவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு விட்டு தப்பி சென்ற நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.   அதேவேளை துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான பெண் மட்டக்களப்பு  வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள புதிய காத்தானகுடி, இலாஹா வீதி, பகுதியில் உள்ள வீட்டில் வசித்து வந்த குடும்ப பெண்ணான 32 வயதுடைய சித்தீக் சிபானியா எனும் பெண்ணின் மீது நேற்றைய தினம்  வெள்ளிக்கிழமை துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பெண்ணின் கணவர் அவுஸ்ரேலியாவில்…

  • மருத்துவ துறைக்கு தெரிவான மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

    மருத்துவ துறைக்கு தெரிவான மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

    மருத்துவ துறைக்கு தெரிவான மாணவன் ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளான்.   காரைதீவைச் சேர்ந்த மாணவன் எஸ்.அக்சயன் (வயது-20) எனும் மாணவனே உயிரிழந்துள்ளான். காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரியில் இம்முறை மருத்துவத் துறைக்கு தெரிவான இரண்டு மாணவர்களுள் அக்சயன் ஒருவராவார். இவர் அண்மையில் வெளியான G.C.E  A/L 2023 (2024) பரீட்சையில் சித்திபெற்று மாவட்டத்தில் 23 வது இடத்தில் மருத்துவ துறைக்கு தெரிவாகியிருந்தார். அவர் தனது குடும்பத்தோடு மூன்று நாட்களுக்கு முன்பு உகந்த மலை முருகன் ஆலயத்துக்கு சென்று…

  • மண்டைதீவில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பேன்!

    மண்டைதீவில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பேன்!

    யாழ்ப்பாணம் – மண்டைதீவு பகுதியில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க நடவடிக்கை எடுப்பேன் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். நான் யாழ்ப்பாணத்தில் ஒரு மைதானத்தில் இளைஞர்களுடன் கதைத்த ஒரு விடயத்தைச் சிலர் சர்ச்சையாக்கியுள்ளனர். அதனை வைத்து எனக்கு எதிரான பிரசாரங்களை அவர்கள் முன்னெடுத்து வருகின்றனர். நல்லாட்சி காலத்தில் மண்டைதீவில் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டு…

  • பாசையூர் அந்தோனியார் பெருவிழா!

    பாசையூர் அந்தோனியார் பெருவிழா!

    யாழ்ப்பாணம் பாசையூர் புனித அந்தோனியார் ஆலயப் பெருவிழா நேற்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த பெருவிழாவில் பதுவைப் புனிதரான அந்தோனியார் தேரில் ஏறி வீதி உலா வந்து பக்தர்களுக்கு ஆசிர் வழங்கினார். இந்நிகழ்வில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் அந்தோனியாரைத் தரித்து ஆசி பெற்றனர்.

  • யாழ்.ஊடகவியலாளர் வீட்டின் மீதான தாக்குதலின் பின்னணியில் புலனாய்வாளர்கள் ?

    யாழ்.ஊடகவியலாளர் வீட்டின் மீதான தாக்குதலின் பின்னணியில் புலனாய்வாளர்கள் ?

    யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளரின் வீட்டின் மீதான தாக்குதலின் பின்னணியில் அரச புலனாய்வுப் பிரிவு இருப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் சந்தேகம் வெளியிட்டார்.   யாழ்ப்பாணம் – அச்சுவேலியில் உள்ள ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனின் வீட்டின் மீது இனந்தெரியாத நபர்கள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர். குறித்த தகவலறிந்து நேற்று அங்கு சென்று பார்வையிட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,…

  • யாழில். சட்டவிரோதமாக உணவு பொருட்களை இறக்குமதி செய்து விற்பனை செய்தவருக்கு தண்டம்!

    யாழில். சட்டவிரோதமாக உணவு பொருட்களை இறக்குமதி செய்து விற்பனை செய்தவருக்கு தண்டம்!

    முறையான அனுமதியின்றி உணவு பொருளை இறக்கு மதி செய்து விற்பனை செய்த குற்றச்சாட்டில் வர்த்தகர் ஒருவருக்கு 12 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்து நாட்டில் இருந்து முறையான இறக்குமதி அனுமதியின்றி உணவு உற்பத்தி பொருட்களை இறக்குமதி செய்து , யாழில் உள்ள பல்பொருள் அங்காடிகளுக்கு விற்பனை செய்து வந்த நபர் ஒருவருக்கு எதிராக மானிப்பாய் பொது சுகாதார பரிசோதகரினால் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் நேற்றைய தினம் வியாழக்கிழமை வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையின் போது சந்தேகநபர்…

  • யாழில். காணமால் போன கடற்தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் மீட்பு!

    யாழில். காணமால் போன கடற்தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் மீட்பு!

    யாழ்ப்பாணம் – அனலைதீவில் இருந்து கடற்றொழிலுக்குச் சென்று காணமல் போன இருவரும் இந்தியாவில் கரையொதுங்கியுள்ளனர்.   அனலைதீவைச் சேரந்த திருச்செல்வம் மைக்கல் பெனாண்டோ,நாகலிங்கம் விஜயகுமார் என்ற இருவருமே படகு இயந்திரம் பழுதாகி தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் பகுதியில் கரையொதுங்கியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இருவரிடம் பொலிஸார் மற்றும் கரையோர காவல் படையினர் விசாரணைகளை மேற்கொள்வதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அனலைதீவில் இருந்து கடந்த திங்கட்கிழமை  மாலை 5 மணியளவில் கடற்தொழிலுக்கு சென்ற இருவரைக் காணவில்லை என குடும்பத்தினர் அறிவித்திருந்தமை…

  • யாழில் 135 கிலோ கஞ்சா மீட்பு!

    யாழில் 135 கிலோ கஞ்சா மீட்பு!

    யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதியில் 135 கிலோ கஞ்சா போதைப்பொருள் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.   வடமராட்சி கிழக்கு தாளையடி பகுதியில் பெருமளவான கஞ்சா போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கடற்படை புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த கடற்படையினர் கஞ்சா பொதிகளை மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட கஞ்சா போதைப்பொருள் 135 கிலோ எனவும் , மேலதிக சட்ட நடவடிக்கைக்காக அவற்றினை மருதங்கேணி பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.