Category: இலங்கை செய்திகள்

  • ஷிரந்தி ராஜபக்சவின் சகோதரருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

    ஷிரந்தி ராஜபக்சவின் சகோதரருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

    ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்கலை விளக்க மறியல் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நிஷாந்த, விமானங்கள் கொள்முதல் தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து நடந்து வரும் விசாரணை சம்பந்தமாக, ஊழல் அல்லது மோசடிகள் குறித்த முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், அவரை கொழும்பு முதன்மை நீதிவான் தனுஜா லக்மலி ஜயதுங்கா முன்னிலையில் முன்னிலைப்படுத்திய நீதிமன்றம், எதிர்வரும் ஜூலை 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது.…

  • கொழும்பு மத்திய தபால் நிலையத்தில் ஒரு பார்சலிலிருந்து துப்பாக்கி

    கொழும்பு மத்திய தபால் நிலையத்தில் ஒரு பார்சலிலிருந்து துப்பாக்கி

    கொழும்பு மத்திய தபால் நிலையத்திற்கு அனுப்பப்பட்ட ஒரு பொதியில் தானியங்கி துப்பாக்கி மற்றும் 5 தோட்டாக்கள் அடங்கிய பொருட்களை கைப்பற்றியுள்ளதாக கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் குறித்த துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகள் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கோட்டை பொலிஸார் இன்று (01.07.2025) நீதவான் நிலுபுலி லங்காபுரவிடம் தெரிவித்துள்ளனர். இதற்கமைய டி.ஆர். விஜேவர்தன மாவத்தையில் உள்ள மத்திய தபால் நிலையத்தில் வைத்து சந்தேகத்திற்கிடமான பொதியை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இதன்படி கடந்த மார்ச் 19 ஆம் திகதி கட்டுநாயக்க விமான…

  • யாழில் கசிப்புடன் இளைஞர் கைது

    யாழில் கசிப்புடன் இளைஞர் கைது

    சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏழாலை பகுதியில் 19 வயதுடைய இளைஞர்  கசிப்புடன் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த இளைஞர் 25 லீட்டர் கசிப்புடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சுன்னாகம் பொலிஸார் இன்றையதினம்(29.06.2025) மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபரை மல்லாகம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  • இலங்கையின் எல்லைக்குள் கால் வைத்தால் கைது செய்யப்படுவீர்கள்! எச்சரிக்கை விடுத்த சந்திரசேகர்

    இலங்கையின் எல்லைக்குள் கால் வைத்தால் கைது செய்யப்படுவீர்கள்! எச்சரிக்கை விடுத்த சந்திரசேகர்

    இலங்கையின் எல்லைக்குள் கால் வைத்தால் கைது செய்யப்படுவீர்கள் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் எச்சரிக்கை விடுத்துள்ளார். உலக வங்கிக் குழுவினர் மற்றும் அமைச்சர்களான பிமல் ரத்நாயக்க, சுனில் ஹந்துன் நெத்தி, சந்திரசேகரன் ஆகியோருடன் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் பங்கேற்ற கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்று (29.06.2025) இடம்பெற்றது. இதற்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் சந்திரசேகர் இலங்கையின் எல்லைக்குள் சட்டவிரோத கடற்றொழில் ஈடுபட்டால் கைது செய்யப்படுவீர்கள் என எச்சரித்துள்ளார். “அத்துடன், அவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளுக்கு எதிராக…

  • சிறை வாழ்க்கைக்கு எம் குடும்பம் அஞ்சவில்லை! கெஹலிய ரம்புக்வெல

    சிறை வாழ்க்கைக்கு எம் குடும்பம் அஞ்சவில்லை! கெஹலிய ரம்புக்வெல

    என்னையும் என் குடும்பத்தையும் சிறையில் அடைக்க இந்த அரசாங்கம் முயற்சிக்கின்றது என்று முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல குற்றஞ்சாட்டியுள்ளார். கெஹலிய ரம்புக்வெல மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் ஐந்து பேருக்கு எதிராக இலஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் ஆணையம் நேற்று முன்தினம் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கெஹலிய ரம்புக்வெல, அவரது மனைவி, மூன்று மகள்கள் மற்றும் ஒரு மருமகன் மீது…

  • இந்தியாவில் இருந்து படகில் கடத்தி வரப்பட்ட பெருமளவான கஞ்சா! மூவர் கைது

    இந்தியாவில் இருந்து படகில் கடத்தி வரப்பட்ட பெருமளவான கஞ்சா! மூவர் கைது

    இந்தியாவில் இருந்து படகு மூலம் கடத்தி வரப்பட்ட 250 கிலோகிராம் கேரள கஞ்சா யாழ்.காரைநகர் பகுதியில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. கேரள கஞ்சா கடத்தி வரப்படுவதாகக் கடற்படையினருக்குக் கிடைத்த தகவலின் பெயரில் சந்தேகத்துக்கிடமான படகைக் கடற்படையினர் மறித்து சோதனையிட்டனர். இதன்போதே அந்தப் படகில் இருந்து 250 கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. இதையடுத்துப் படகில் இருந்த மூவரையும் படகுடன் கடற்படையினர் கைது செய்துள்ளதுடன் படகையும் கைப்பற்றியுள்ளனர். கைப்பற்றப்பட்ட கஞ்சா மற்றும் படகுடன் சந்தேகநபர்கள் மூவரும் சட்ட நடவடிக்கைக்காக ஊர்காவற்றுறைப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

  • உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: பாதுகாப்பு பிரதி அமைச்சர் வழங்கியுள்ள உறுதிமொழி

    உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: பாதுகாப்பு பிரதி அமைச்சர் வழங்கியுள்ள உறுதிமொழி

    இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில்  நிச்சயம் நீதி நிலைநாட்டப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வடகல தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விசாரணை தொடர்பில் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது, உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரும், சட்டமா அதிபர் திணைக்களத்தினரும் கூட்டாகச் செயற்பட்டு வருகின்றனர். பிரதான சூத்திரதாரி யார் என்பது உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில்…

  • திருகோணமலை-தோப்பூரில் காட்டு யானைகளின் அட்டகாசம்!

    திருகோணமலை-தோப்பூரில் காட்டு யானைகளின் அட்டகாசம்!

    திருகோணமலை, தோப்பூர் -செல்வநகர் கிராமத்திற்குள் இன்று அதிகாலை உட்புகுந்த காட்டு யானைகள் பயன் தரும் தென்னை மரங்களை சேதப்படுத்தியுள்ளன. இதன்போது காய்த்து பலன்தரக் கூடிய சுமார் 10 தென்னை மரங்கள் காட்டு யானைகளால் சேதப்படுத்தப்பட்டுள்ளன. ஊருக்குள் வந்து காட்டு யானைகள் இவ்வாறு சேதம் விளைவித்துள்ளமையால் ஊருக்குள் இருக்கின்ற மக்களும் அச்சத்துடன் வாழ வேண்டிய நிலை காணப்படுவதாகவும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். காட்டு யானைகளின் அட்டகாசத்தை கட்டுப்படுத்த அரசாங்கம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தோப்பூர் -செல்வநகர்…

  • காணி பிடிப்பு வர்த்தமானி தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு

    காணி பிடிப்பு வர்த்தமானி தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு

    காணி நிர்ணய சட்டம் பிரிவு 4இற்கு அமைவாக வடக்கில் காணிகளை சுவீகரிக்கும் 28.03.2025 திகதியிடப்பட்ட 2430/25 இலக்கமிடப்பட்ட வர்த்தமானியை இடைநிறுத்தி உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவைப் பிறப்பித்துள்ளது. ஜனாதிபதி சட்டத்தரணி M. A. சுமந்திரன் தாக்கல் செய்த மனு இன்று(28) விசாரிக்கப்பட்ட பின்னர் குறித்த வர்த்தமானியை தற்காலிகமாக வலிதற்றதாக்கும் இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அடுத்த வழக்கு விசாரணை எதிர்வரும் ஜூலை மாதம் 02 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. அதற்கிடையில் குறித்த வர்த்தமானியை மீள கைவாங்குவதற்கான வர்த்தமானியை அரசாங்கம்…

  • யாழில் திடீரென சுழற்றி அடித்த காற்று!

    யாழில் திடீரென சுழற்றி அடித்த காற்று!

    யாழ்ப்பாணத்தில் காலநிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டு பல பிரதேசங்களில் சற்று முன்னர் பாரிய சுழல் காற்றுடன் மழை பெய்ய ஆரம்பித்துள்ளது திடீரென சுழற்றி அடித்த காற்றினால் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. தற்போது இடி மழையுடன் பலத்த காற்று ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது இதேவேளை பாரிய காற்றினால் மின்சாரம் பல பகுதிகளில் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் மரங்கள் முறிந்து விழுந்து சேதம் ஏற்படும் பட்சத்தில் உடனடியாக மின்சார சபையை தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.