Category: இந்திய செய்திகள்
-
அமலாக்கத்துறை, ஐ.டி, சி.பி.ஐ.தான் பிரதமர் நரேந்திரமோடியின் குடும்பம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்
சென்னை : ‘அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சி.பி.ஐ. தான். பிரதமர் நரேந்திர மோடியின் குடும்பம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் காட்டமாக பதிவிட்டுள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- பா.ஜ.க.வின் ‘வாஷிங் மெஷின்’ பாணியை ஆதாரப்பூர்வமாகத் தோலுரித்துள்ளது ஆங்கில செய்தி நாளேடு. பா.ஜ.க.வுக்குத் தாவிய எதிர்க்கட்சித் தலைவர்கள் 25 பேரில், 20 பேர் மீதான ஊழல் வழக்குகளில் நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும், 3 பேர் மீதான வழக்குகள் மொத்தமாக முடித்தே வைக்கப்பட்டுவிட்டன.
-
பிரசாரத்தின் போது கடையில் கூழ் குடித்து யு.பி.ஐ. மூலம் பணம் செலுத்திய தமிழிசை
சென்னை, தென்சென்னையில் பிரசாரத்தின் போது கடையில் கூழ் குடித்து யு.பி.ஐ. மூலம் பணம் செலுத்தினார் பா.ஜ.க. வேட்பாளர் தமிழிசை. தெலங்கானா கவர்னராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன், தனது ஆளுநர் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டுள்ளார். இவர் தென்சென்னை தொகுதியின் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில், கொளுத்தும் வெயிலையும் பொருள்படுத்தாமல், தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
-
போதைப்பொருள் கடத்தல் வழக்கு: டெல்லியில் விசாரணைக்கு ஆஜரானார் இயக்குநர் அமீர்
போதைப்பொருள் கடத்தல் வழக்கு தொடர்பான விசாரணைக்காக டெல்லியில் உள்ள தேசிய போதை பொருள் தடுப்புப்பிரிவு அலுவலகத்தில் இயக்குநர் அமீர் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த ஜாபர் சாதிக்கை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கடந்த 9-ம் தேதி டெல்லியில் கைது செய்தனர். இதையடுத்து விசாரணையை தீவிரப்படுத்திய அதிகாரிகள் போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைக்கும் பணத்தில் ஜாபர் சாதிக் திரைப்படங்களை தயாரித்ததும் தெரியவந்துள்ளது. இயக்குநர் அமீர் இயக்கத்தில் வெளியான இறைவன்…