Category: இந்திய செய்திகள்

  • வீட்டு கனவுக்கு வித்திட்டது தமிழக அரசு – பாதீட்டில் மாபெரும் திட்டம் அறிவிப்பு

    தமிழ்நாடு அரசின் 2026–2027ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் , பொதுமக்களுக்கு பாதுகாப்பான மற்றும் தரமான வீடுகளை வழங்கும் நோக்கில் “அனைவருக்கும் தரமான வீடு” திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்காக 1,253 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன் மூலம், 24,313 அடுக்குமாடி குடியிருப்புகள் முழுமையாக நிர்மாணிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பொருளாதார ரீதியில் நலிவடைந்த பிரிவினரின் நலனைக் கருத்தில் கொண்டு, 14,194 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை நிர்மாணிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.…

  • தமிழ்நாடு பாதீடு 2026-27 : ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்திற்கு ரூ.560 கோடி நிதி ஒதுக்கீடு!

    தமிழ்நாடு அரசின் 2026–27ஆம் ஆண்டுக்கான பாதீடு அறிக்கையில், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் “தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்” மூலம் 1 கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குழந்தையின் பிறப்பைக் கொண்டாடும் வகையிலும், தாய்மையின் மகத்துவத்தையும் தாய்மாமனின் பாசத்தையும் போற்றும் வகையிலும், இந்த 1 கிராம் தங்க மோதிரம் வழங்கப்படவுள்ளதாக பாதீடு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் இந்தத் திட்டத்தின் கீழ் தங்க மோதிரம் வழங்கப்படவுள்ளதுடன், திட்டத்தை சிறப்பாக…

  • ஆணவம் அழிவுக்கு கொண்டுசெல்லும்!.. பாசிசத்துக்கு விழுந்த அடி!.. ஸ்டாலின் கமெண்ட்!..

    முதல்வர் விஜயை நடிகை திரிஷாவுடன் இணைத்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி பேசியது தவெகவினரிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் காரணமாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இன்று காலை அவர் கைது செய்யப்பட்டு போலீசார் அவரை போலீஸ் வாகாந்த்தில் தஞ்சாவூருக்கு கூட்டி சென்றனர். உதயநிதியின் கைதுக்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். செல்லும் வழியெங்கும் திமுகவின் போராட்டம் நடத்தினார்கள். ஒரு பக்கம் தமிழகம் முழுவதும் பல இடங்களிலும் பஸ் மறியல் உள்ளிட்ட போராட்டங்கள் நடைபெற்றது. இதையடுத்து திமுக தலைவர்…

  • எப்படி நாகரீகமாக பேச வேண்டும் என்பதை ஸ்டாலினிடம் உதயநிதி கற்று கொள்ள வேண்டும்: தவெக

    கோவையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய தமிழக வெற்றி கழகத்தின் முதன்மை செய்தி தொடர்பாளர் புகழேந்தி, திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது குறித்து அதிரடியான மற்றும் கடுமையான கருத்துக்களை தெரிவித்துள்ளார். உதயநிதி ஸ்டாலின் எந்தவொரு விவகாரத்திலும் சம்பந்தமில்லாமல் திரைத்துறை பிரபலங்களைப் பற்றியும், காவிரி விவகாரம் குறித்தும் மிகவும் பொறுப்பற்ற முறையில் பேசி வருவதாக அவர் குற்றம் சாட்டினார். செய்தியாளர் சந்திப்பில் மேலும் பேசிய அவர், “உதயநிதி ஸ்டாலின் இதுபோன்று அவதூறாக பேசினால், சட்டம் சும்மா இருக்குமா?…

  • சுற்று வழியில் தஞ்சைக்கு அழைத்து செல்லப்படும் உதயநிதி , நள்ளிரவு வரை விசாரிக்க திட்டம்.!

    9 பிரிவுகளின் கீழ் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாக கூறும் காவல்துறை, அவரை விசாரிக்க சென்னையில் இருந்து தஞ்சை தெற்கு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் திருச்சி வழியாக தஞ்சை அழைத்து செல்லப்பட்டு வருகிறார். விசாரணைக்கு பின் இன்றே விடுவிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ள நிலையில், இது திட்டமிட்ட அலைக்கழிப்பு என்று திமுக-வினர் குற்றம்சாட்டி உள்ளனர். அரியலூர் வழியாக சென்றாலே 1 மணி நேரத்தில்…

  • உதயநிதி ஸ்டாலின் கைதை தொடர்ந்து நடிகை நிவேதா பெத்துராஜின் திருக்குறள் வைரல்

    தமிழ்நாட்டு எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகை நிவேதா பெத்துராஜ் பதிவிட்ட திருக்குறள் வைரலாகி வருகிறது. தஞ்சையில் நேற்று திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். இந்தநிலையில் நடிகை நிவேதா பெத்துராஜ், “புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல், அறங்கூறும் ஆக்கம் தரும்”…

  • சண்டீபுரா வைரஸ் அச்சம்: குஜராத்தில் 22 சிறுவர்கள் உயிரிழப்பு!

    இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் ‘சண்டீபுரா’வைரஸ் தொற்றினால் 35 பேர் பாதிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் சுகாதார அதிதீவிர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 15 வயதுக்குட்பட்ட சிறுவர்களிடையே சந்தேகத்தின் பேரில் பரிசோதிக்கப்பட்ட 184 பேரில், இதுவரை 22 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாகவும், 11 பேரின் பரிசோதனை முடிவுகள் இன்னும் எதிர்பார்க்கப்படுவதாகவும் குஜராத் சுகாதார அமைச்சர் பிரபுல் பஞ்சேரியா தெரிவித்துள்ளார். காந்திநகர், சபர்காந்தா-ஹிமத்நகர், படான், ராஜ்கோட் மற்றும் பவநகர் ஆகிய பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் 7 நோயாளிகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப்…

  • “ஐகோர்ட் உத்தரவை” மீறி உதயநிதி கைது.!! அராஜகம் செய்யும் தவெக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம்

    சென்னை: 12 மணி வரை கைது செய்ய கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியும் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீதான கைது நடவடிக்கையை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக-வினர் போரட்டங்களில் ஈடுபட்டு உள்ளனர். தமிழகம் முழுவதுமுள்ள திமுக-வினர் தங்களின் தலைவர் இது செய்யப்பட்டதை கண்டித்து சாலைகளில் இறங்கி போராடி வருகின்றனர். திருவாரூர், பொள்ளாச்சி, ராசிபுரம், தஞ்சை, ஈரோடு, புதுக்கோட்டை, விழுப்புரம் என தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் திமுக-வினர் போரட்டங்களில் ஈடுபட்டு உள்ளனர்.…

  • தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது – தி.மு.கவினர் போராட்டம்

    எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் தி.மு.கவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காவிரி விவகாரம் தொடர்பாக த.வெ.க. அரசைக் கண்டித்து தஞ்சாவூரில் தி.மு.க. சார்பில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முதல்வர் விஜய் மற்றும் பெண்கள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இழிவாகப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் உதயநிதி மீது த.வெ.க. மகளிரணியினர், தஞ்சாவூர் பொலிஸ் நிலையத்தில் அளித்த முறைப்பாடில் அவர்…

  • ஏழைப்பெண்ணின் வங்கிக்கணக்கில் நூறு கோடி ரூபாய்

    பெண்ணொருவரின் வங்கிக்கணக்கில் சுமார் நூறு கோடி ரூபாய் தவறுதலாக டெபாஸிட் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஏழைப்பெண்ணொருவரின் வங்கிக்கணக்கில் சுமார் நூறு கோடி ரூபாய் டெபாஸிட் செய்யப்பட்டுள்ள விடயம் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது. கொல்கொத்தாவில், ஆஸ்பெஸ்டாஸ் கூரை கொண்ட வீடொன்றில் வாழ்ந்துவருபவர் கஷ்மிரா ஷா (36). க‌ஷ்மிராவின் கணவர் பை தைக்கும் வேலை செய்ய, கணவருக்கு உதவியாக சேலைகளுக்கு எம்ப்ராய்டரி செய்யும் வேலை செய்கிறார் கஷ்மிரா. சமீபத்தில், தனது வங்கிக்கணக்கில் வீட்டு எரிவாயுவுக்கான உதவித்தொகை வரவு…