Author: yalarasan canada
-

வாகனங்களை இறக்குமதி செய்வதில் சிக்கல் நிலை!
வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு இலங்கையின் பொருளாதாரம் இன்னும் நல்ல நிலையில் இல்லை என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதார கற்கைகள் பிரிவின் பேராசிரியர் பிரியந்த துனுசிங்க தெரிவித்துள்ளார். மேலும், சுற்றுலா பயணிகளின் வருகை மற்றும் வெளிநாட்டு பணியாளர்கள் நாட்டிற்கு அனுப்பும் பணத்தினால் நாட்டின் பொருளாதாரம் ஒரு குறிப்பிட்ட மட்டத்தில் தான் இருப்பதாகவும் பேராசிரியர் பிரியந்த துனுசிங்க சுட்டக்காட்டியுள்ளார்.
-

யாழில் கோவிட் தொற்றால் வெளிநாட்டில் இருந்து வந்த பெண் உயிரிழப்பு!
யாழ். மாவட்டத்தில் நீண்ட காலத்திற்கு பின்னர் கோவிட் தொற்று காரணமாக பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த தகவலை யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.பிரான்ஸ் நாட்டில் இருந்து வந்த 62 வயதான பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கோவிட் உயிரிழப்பு தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ். மாவட்டத்தில் நீண்ட காலத்திற்கு பின்னர் பிரான்ஸ் நாட்டில் இருந்து ஆயுள்வேத சிகிச்சைக்காக யாழ்ப்பாணத்திற்கு வந்த 62 வயதான பெண் கோவிட் (COVID 19) கோவிட் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார்.
-

14 வயது மாணவியை கடத்திய 17 வயது இளைஞன்!
14 வயது மாணவியை கடத்திச் சென்ற குற்றச்சாட்டின் பேரில் 17 வயது இளைஞன் ஒருவரை காத்தான்குடி பொலிஸார் கைது செய்துள்ளனர்.குறித்த கைது நடவடிக்கை இன்று (15.04.2024) காலை இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி கிரான்குளத்தை சேர்ந்த மேற்படி மாணவியை காதல் என்ற பெயரில் கடத்திச் சென்ற திருகோணமலை குச்சவெளியைச் சேர்ந்த 17 வயது இளைஞன் கொழும்பில் சில நாட்கள் அவருடன் தங்கியிருந்துள்ளார். அதனையடுத்து, மீண்டும் நேற்று சொந்த இடம் திரும்பி வீட்டில் தங்கியிருப்பதாக கிடைக்கப்பெற்ற தகவல்…
-

வவுனியாவில் பேருந்து சாரதி கைது!
வவுனியாவில் (Vavuniya) மதுபோதையில் தனியார் பேருந்தினை செலுத்திய சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர். புத்தாண்டு தினத்தினை முன்னிட்டு கடந்த ஒரு வாரமாக நாடு முழுவதும் போக்குவரத்து பொலிஸாரினால் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளதுடன் மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், வவுனியா மாவட்டத்திலும் போக்குவரத்து பொலிஸார் கடமையில் ஈடுபட்டிருந்ததுடன் மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யும் நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர். இதன்போது, மதுபோதையில் வாகனத்தினை செலுத்திய குற்றச்சாட்டில்…
-

புத்தளத்தில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழப்பு!
புத்தளம் – மஹகும்புக்கடவல , ஹோம்ப கஸ்வெவ பகுதியில் மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவமானது நேற்று (13) மாலை இடம்பெற்றுள்ளது. இதன்போது மஹகும்புக்கடவல , ஹோம்ப கஸ்வெவ பகுதியைச் சேர்ந்த 56 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த நபர் விவசாய நிலத்தில் வேலை செய்துகொண்டிருந்த போது மின்னல் தாக்குதலுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் மின்னல் தாக்குதலுக்கு உள்ளான நபரை அங்கிருந்தவர்கள் உடனடியாக மஹகும்புக்கடவல கிராமிய வைத்தியசாலையில் அனுமதித்த…
-

யாழ். வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் ஆலய விசேட பூஜை!
குரோதி வருடப்பிறப்பை முன்னிட்டு வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றுள்ளது.விசேட பூஜை வழிபாடுகள் இன்று (14.4.2024) காலை நல்லூர் ஆலயத்தில் இடம்பெற்றுள்ளது.பூஜைகளை தொடர்ந்து முருகப்பெருமான் உள்வீதி வலம் மற்றும் வெளிவீதி வலம் வந்து அடியவர்களுக்கு அருள் பாலித்தார்.யாழ்ப்பாணத்திலுள்ள இந்து ஆலயங்களில் நல்லூர் கந்தசுவாமி கோவிலுக்கு சிறப்பு நாட்களில் வழிபாட்டு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை சற்று அதிகமாக இருப்பது வழக்கம். அதேபோன்று , இன்று மலர்ந்துள்ள சித்திரை வருடப்பிறப்பு வழிபாட்டுக்கு பல…
-

தமிழர்கள் தேர்தலை முற்றாக புறக்கணிக்க வேண்டும் : கஜேந்திரன் வலியுறுத்து!
ஜனாதிபதி தேர்தல் பரப்புரைகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் தமிழர்கள் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் (Selvarasa Kajenthiran) தெரிவித்துள்ளார். ஐனாதிபதி தேர்தல் மற்றும் பொது வேட்பாளர் பகிஷ்கரிப்பு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “பொது வேட்பாளரை நிறுத்துவது மற்றும் பகிஸ்கரிப்பது தொடர்பாக வாதப்பிரதிவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. 75 வருடங்களாக…
-

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய பெண்!
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் போதைமாத்திரைகளை உட்கொண்டு அவற்றை கடத்த முயன்ற வெளிநாட்டுப் பெண் ஒருவரை இலங்கை சுங்கப் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட 38 வயதான மடகாஸ்கர் நாட்டை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது. இவர் சுமார் 75 கொக்கைன் எனப்படும் போதைப்பொருள் பக்கெற்றுக்களை விழுங்கியதாக சந்தேகிக்கப்படுகிறது. இதன் மதிப்பு சுமார் ரூ. 35 மில்லியன் ஆகும். கொக்கைன் எனப்படும் போதைப்பொருளை மாத்திரைகள் வடிவில் சிறு பொதிகளாக சுற்றி விழுங்கியுள்ளார். இதனையடுத்து…
-

கிளிநொச்சியில் வீட்டு உரிமையாளரை தாக்கிய மர்மநபர்கள்!
கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியில் அடையாளம் தெரியாத நபர்கள் வீடொன்றுக்குள் புகுந்து பொருட்களை சேதப்படுத்தியதுடன் வீட்டு உரிமையாளர் மீதும் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் நேற்று (12-04-2024) இரவு 11 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த நபர்கள் மது போதையில் வாள்கள் மற்றும் பொல்லுகளுடன் சென்று தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் கயமடைந்தவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-

பொது வேட்பாளராக களமிறங்கும் ரணில்!
ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக ரணிலைக்(Ranil Wickremesinghe) களமிறக்குவோம் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க(Ravi Karunanayake) தெரிவித்துள்ளார். அண்மையில் கொழும்பில்(Colombo) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது கொள்கைகளை மாற்றியதில்லை. ஆட்சியை இழந்தாலும் தனது கொள்கைகளை கடைப்பிடித்தார். பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பவும் நாட்டை இந்த இடத்திற்கு கொண்டு வரவும் உழைத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இம்முறை கட்சி சார்பற்ற…