Author: yalarasan canada

  • அலைபேசிகளுக்கு இன்று கிடைக்கவுள்ள அவசர செய்தி

    அலைபேசிகளுக்கு இன்று கிடைக்கவுள்ள அவசர செய்தி

    கனடியர்களின் அலைபேசிகளுக்கு இன்றைய தினம் அவசர எச்சரிக்கை தகவல் கிடைக்கப் பெறவுள்ளது.மத்திய அரசாங்கம் இந்த அவசர எச்சரிக்கை தகவலை அனுப்ப உள்ளது.பரீட்சார்த்த அடிப்படையில் இந்த தகவல் அனுப்பி வைக்கப்படுவதாக அறிவித்துள்ளது. கனடாவில் அவசர நிலைமைகளின் போது இவ்வாறு அலைபேசிகளுக்கு அவசர எச்சரிக்கை செய்தி அனுப்பி வைக்கப்படுவது வழமையானது. இந்த எச்சரிக்கை செய்தி அனுப்பும் முறைமை சீரான முறையில் தொழிற்படுகின்றதா என்பதனை பரீட்சிப்பதற்காக இவ்வாறு இன்றைய தினம் பரீட்சார்த்த அடிப்படையில் எச்சரிக்கை செய்தி அனுப்பி வைக்கப்பட உள்ளது.  

  • கோழி முட்டை மூலம் பிரபலமான பெண்!

    கோழி முட்டை மூலம் பிரபலமான பெண்!

    கனடாவில் பெண் ஒருவர் தனது கோழி முட்டையின் மூலம் பிரபல்யமாகியுள்ளார்.ஒன்றாரியோ மாகாணத்தின் மாட்டாவா பகுதியில் வசித்து வரும் மெலின்டா கிரியோனின் என்ற பெண் வளர்த்த கோழிகளில் ஒன்று பெரிய முட்டை ஒன்றை இட்டுள்ளது. மெலின்டாவின் கோழிப் பண்ணையில் சுமார் 60 கோழிகள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றன. வழமையான முட்டையின் அளவினை விடவும் மூன்று மடங்கு பெரிய முட்டையொன்று இடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சாதாரண முட்டை ஒன்றின் எடை 56 கிராம்கள் என்ற போதிலும் இந்த முட்டையின் எடை 152 கிராம்கள்…

  • அதிகரிக்கப்பட்டுள்ள சம்பளம் மற்றும் சலுகைகள்! அரச ஊழியர்கள் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள நம்பிக்கை!

    அதிகரிக்கப்பட்டுள்ள சம்பளம் மற்றும் சலுகைகள்! அரச ஊழியர்கள் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள நம்பிக்கை!

    அரச ஊழியர்களின்  சேவைக்கு ஏற்ற சம்பளம் மற்றும் சலுகைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அரச நிர்வாகத்திற்கு பொறுப்பான உண்மையான அரச அதிகாரியின் பொறுப்பை  அனைவரும் நிறைவேற்றுவீர்கள் என்று நான் நம்புகிறேன் என்று உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த(Ashoka Priyantha) தெரிவித்துள்ளார். 2100 புதிய கிராம உத்தியோகத்தர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (08) முற்பகல் அலரி மாளிகையில் நடைபெற்றது.இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.  

  • வவுனியாவில் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது!

    வவுனியாவில் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது!

    வவுனியாவில் (Vavuniya) 5 கிலோ கிராம் கஞ்சாவுடன் ஒருவர் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த கைது நடவடிக்கையானது புளியங்குளம் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று (07.05.2024) இரவு இடம்பெற்றுள்ளது. வவுனியா, செக்கட்டிப்புலவு பகுதியை சேர்ந்த 26 வயதுடைய இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

  • தரமற்ற மருந்துப் பொருள் இறக்குமதி மோசடி தொடர்பில் இன்னுமொருவர் கைது!

    தரமற்ற மருந்துப் பொருள் இறக்குமதி மோசடி தொடர்பில் இன்னுமொருவர் கைது!

    தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின்(Keheliya Rambukwella) பதவிக் காலத்தில் நடைபெற்ற மனித பாவனைக்குதவாத மனித இம்யூனோகுளோபுலின் உள்ளிட்ட தரமற்ற மருந்துப் பொருள் இறக்குமதி தொடர்பில  தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரியான மருத்துவர் விஜித் குணசேகரவே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். தரமற்ற மருந்துப் பொருள் இறக்குமதி தொடர்பில் இன்று(08) காலை…

  • தமிழ் அரசியல்வாதிகளே மண்ணுக்காக வாய் திறங்கள் : முன்வைக்கப்பட்டுள்ள வேண்டுகோள்!

    தமிழ் அரசியல்வாதிகளே மண்ணுக்காக வாய் திறங்கள் : முன்வைக்கப்பட்டுள்ள வேண்டுகோள்!

    தமிழ் அரசியல்வாதிகள் எமது மண்ணை காப்பாற்றவாவது நாடாளுமன்றத்தில் வாய் திறந்து பேச வேண்டும் என முல்லைத்தீவு தீவு மாதர் சங்க தலைவி சு. கங்கம்மா வேண்டுகோள் விடுத்துள்ளார். வட மாகாண ஆளுநர் செயலாளருக்கு முன்னால் இன்று(08.05.2024) இடம் பெற்ற போராட்டத்தின்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், முல்லைத்தீவு மாவட்டம் மகாவலி என்ற போர்வையில் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கள் சிங்களவர்களுக்கு தாரை வார்த்து கொடுக்கப்படுகிறது. கொக்கதொடுவாயில் 3 கிராமங்கள் ஆறு…

  • கொழும்பு சிறைச்சாலையில் தமிழ் கைதிகளை சந்தித்த யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள்

    கொழும்பு சிறைச்சாலையில் தமிழ் கைதிகளை சந்தித்த யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள்

    கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இரண்டு தமிழ் கைதிகளை நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வராசா கஜேந்திரன் மற்றும் சிவஞானம் சிறீதரன் ஆகியோர் சென்று பார்வையிட்டுள்ளனர். குறித்த கைதிகளை அவர்கள் இன்று (07.05.2024) கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலைக்குச் சென்று பார்வையிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது கடந்த பெப்ரவரி மாதம் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டு கொழும்பில் வைத்துக் கைது செய்யப்பட்ட  முன்னாள் போராளியும், போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் வவுனியா மாவட்டத் தலைவருமான செல்வநாயகம் ஆனந்தவர்ணன் (அரவிந்தன்) மற்றும் கடந்த…

  • யாழில் சீல் வைக்கப்பட்ட சட்ட விரோத கொல்களம்!

    யாழில் சீல் வைக்கப்பட்ட சட்ட விரோத கொல்களம்!

    யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியில் உரிய அனுமதிகள் இன்றி இயங்கி வந்த கொல்களம் நீதிமன்ற உத்தரவில் சீல் வைத்து மூடப்பட்டுள்ளது. அதன் உரிமையாளர் இன்றைய தினம்(07.05.2024) நீதிமன்றில் முன்னிலையானதை அடுத்து ஒரு இலட்ச ரூபாய் சரீர பிணையில் செல்ல மன்று அனுமதித்துள்ளது. மல்லாகம் பகுதியில் உரிய அனுமதிகள் இன்றி கொல்களம் ஒன்று இயங்கி வருவதாக சுகாதார பிரிவினருக்கு நேற்றைய தினம் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் , பொலிஸாருடன் சம்பவ இடத்திற்கு சென்ற போது , அங்கிருந்து மாடு…

  • லிட்ரோ நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு!

    லிட்ரோ நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு!

    கடுவலை – மாபிம பகுதியில் புதிய எரிவாயு நிரப்பு முனையம் நாளை (08) திறந்து வைக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவிக்கையில், “புதிய நிரப்பு முனையம் நாளை திறக்கப்படும்.கெரவலப்பிட்டி முனையம் போதாது. நாளொன்றுக்கு 60,000 சிலிண்டர்கள் வெளியிடப்படுகின்றன. டிசம்பரில் இருந்து வாரத்தில் 2 நாட்கள். பெப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களில் கெரவலப்பிட்டி மற்றும் மாபிம இரண்டும் செயற்பாட்டில் இருந்தன. கெரவலப்பிட்டியை நிறுத்த…

  • ஜனாதிபதித் தேர்தலால் நாடு மீண்டும் ஸ்தம்பிதம் அடையும் நிலை : மத்திய வங்கி ஆளுநர் எச்சரிக்கை!

    ஜனாதிபதித் தேர்தலால் நாடு மீண்டும் ஸ்தம்பிதம் அடையும் நிலை : மத்திய வங்கி ஆளுநர் எச்சரிக்கை!

    மிக மோசமான பொருளாதார நெருக்கடியில் இருந்து தற்காலிகமாக மீளும் செயற்பாடு, இந்த ஆண்டின் இறுதியில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலின் மூலம் ஸ்தம்பிதமடைந்துவிடக்கூடும் என்று   மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க(Nandalal Weerasinghe) எச்சரிக்கை விடுத்துள்ளார். இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். சர்வதேச நாணய நிதியத்தின் மீட்புப் பொதியால் தூண்டப்பட்ட கடுமையான சீர்திருத்தங்கள் காரணமாக, நெருக்கடியால் பாதிக்கப்பட்ட பொருளாதாரம் ஸ்திரமடைந்துள்ளது. எனினும் நாடு முற்றிலும் ஆபத்தில் இருந்து வெளியேறவில்லை என்று நந்தலால் வீரசிங்க…