அமெரிக்க-ஈரான் அமைதி ஒப்பந்தக் கெடு முடிந்தது: ஓமானுக்கு டிரம்ப் எச்சரிக்கை

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே போர் நிறுத்தத்தை எட்டவும், ஹோர்முஸ் ஜலசந்தியைப் (Strait of Hormuz) மீண்டும் திறக்கவும் வழங்கப்பட்ட 60 நாட்கள் கெடு முடிவுக்கு வந்துள்ளது. இந்நிலையில், ஓமான் நாட்டிற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புதிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

ஹோர்முஸ் ஜலசந்தி வழியே கப்பல் போக்குவரத்தை சீரமைக்கும் அமெரிக்க முயற்சிகளுக்கு ஓமான் குறுக்கே நின்றால் கடும் தாக்குதல் நடத்தப்படும் என அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

 ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகக் கப்பல்கள் செல்வதற்கான பாதைகளை நிர்வகிக்க ஓமானுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக ஈரான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் கையெழுத்தான 60 நாட்கள் கால அவகாசம் கொண்ட அமெரிக்க-ஈரான் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) எந்தவித இறுதி முடிவும் இன்றி முடிவடைந்துள்ளது.

 ஜலசந்தியை மீண்டும் திறப்பது மற்றும் ஈரான் மீதான பொருளாதார தடைகளை நீக்குவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் முடங்கியுள்ளதால், அப்பகுதியில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *