சொந்த படையின் தாக்குதலை எதிரி என நினைத்து ஏவுகணையை ஏவியது இஸ்ரேல்!

தெற்கு லெபனானில் முன்னெடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கைகளின் போது, தமது சொந்தப் படையினரின் தாக்குதலை எதிரிகளின் தாக்குதல் எனத் தவறாகக் கணித்து, இஸ்ரேலிய இராணுவம் தவறுதலாக இடைமறிப்பு ஏவுகணை ஒன்றை ஏவியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து இஸ்ரேலிய இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், லெபனான் எல்லையில் நடைபெற்ற இராணுவ நடவடிக்கையின் போது ஏற்பட்ட இந்தத் தவறான கணிப்பு காரணமாகவே இடைமறிப்பு ஏவுகணை செலுத்தப்பட்டதாக உறுதிப்படுத்தியுள்ளது.

இருப்பினும், இந்தத் தவறான ஏவுகணை வீச்சினால் எவருக்கும் காயங்களோ அல்லது பாதிப்புகளோ ஏற்படவில்லை எனத் தெரிவித்துள்ள இஸ்ரேலிய இராணுவம், இந்த சம்பவம் எவ்வாறு நடந்தது என்பது குறித்து விரிவான மீளாய்வுகளை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.