மசகு எண்ணெய்யின் விலையில் வீழ்ச்சி

ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது தொடர்பாக ஈரானுடன் அமெரிக்கா விரைவில் ஒப்பந்தம் எட்டக்கூடும் என உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்ததை அடுத்து, கடந்த சில மாதங்களாக உயர்ந்திருந்த மசகு எண்ணெய் விலை தற்போது அதிரடியாகக் குறைந்துள்ளது.

இதன்படி WTI ரக மசகு எண்ணெயின் விலை 5 சதவீதம் சரிந்து ஒரு பீப்பாய் 76.32 டொலராக பதிவாகியுள்ளது.

அத்துடன் சர்வதேச அளவிலான ப்ரென்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 80 டொலராக பதிவாகியுள்ளது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *