அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தை இன்று ஆரம்பம்: திட்டமிட்ட தாக்குதலை இரத்து செய்தார் டொனால்ட் ட்ரம்ப்!

ஈரான் மீது மேற்கொள்ளவிருந்த பிரம்மாண்ட தாக்குதலைக் தற்காலிகமாக இரத்து செய்துள்ளதாக அறிவித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரான் அரசுடனான உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தை இன்று (03) திங்கள்கிழமை பிற்பகல் ஆரம்பிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

ஹோர்முஸ் நீரிணையைத் திறப்பது மற்றும் ஈரானின் அணுசக்தித் திட்டங்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக ஒப்பந்தத்தை எட்டுவதே இந்த பேச்சுவார்த்தையின் முக்கிய நோக்கமாகும்.

சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் கட்டார் ஆகிய நாடுகளின் வேண்டுகோளைத் தொடர்ந்து, ஈரான் மீதான இராணுவத் தாக்குதலை நிறுத்தி வைத்துள்ளதாக ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

ஒப்பந்தத்தை எட்டுவதற்குத் திட்டவட்டமான கால அவகாசம் எதையும் நிர்ணயிக்க மறுத்த ட்ரம்ப், “பல மனித உயிர்கள் பலியாவதை நான் விரும்பவில்லை; அமைதியான வழியில் உடன்பாடு காண்பதே எனது விருப்பம்” எனக் கூறியுள்ளார்.

உலக எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு போக்குவரத்தில் 20 சதவீதம் பங்கு வகிக்கும் ஹோர்முஸ் நீரிணை முடங்கியுள்ளதால், உலகளவில் எரிபொருள் விலையேற்றம் அடைந்துள்ளது. எனினும், பேச்சுவார்த்தை செய்தி வெளியானதைத் தொடர்ந்து எண்ணெய் விலை 4 சதவீதம் வரை சரிவடைந்துள்ளது.

ஓமான் நாட்டின் மத்தியஸ்தத்துடன் ஹோர்முஸ் நீரிணை பயன்பாடு குறித்தான பேச்சுவார்த்தைகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக ஈரானிய வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.

கப்பல் போக்குவரத்திற்கான புதிய வழித்தடங்கள் குறித்தே பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாகவும், இது ஹோர்முஸ் நீரிணையை மூடுவது தொடர்பான விவாதம் அல்ல என்றும் ஈரான் வெளிவிவகார அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.

கப்பல் போக்குவரத்திற்கான புதிய வழித்தடங்கள் குறித்தே பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாகவும், இது ஹோர்முஸ் நீரிணையை மூடுவது தொடர்பான விவாதம் அல்ல என்றும் ஈரான் வெளிவிவகார அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.

ஒப்பந்தம் எட்டப்பட்டாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி — ஈரான் மீண்டும் அணுசக்தி அல்லது ஏவுகணைத் திட்டங்களை தீவிரப்படுத்த முயன்றால் இஸ்ரேல் நிச்சயம் நேரடித் தாக்குதலை நடத்தும் என இஸ்ரேலிய எரிசக்தி அமைச்சர் எலி கோஹன் எச்சரித்துள்ளார்.


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *