மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடலுக்கு அப்பாலுள்ள கடற்பரப்புகளுக்கு மறு அறிவித்தல் வரை கடற்பயணம் செய்ய வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம், கடற்சார் மற்றும் மீன்பிடி சமூகத்தினருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று (2) மாலை விடுத்துள்ள அறிக்கையொன்றில், இந்த எச்சரிக்கை நாளை (3) பி.ப. 8.00 மணி வரை செல்லுபடியாகும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது நாளை அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 60-70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதால், அப்பகுதிகளிலுள்ள கடல் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என்றும் அவ்அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, புத்தளத்திலிருந்து கொழும்பு ஊடாக காலி வரையான கடலுக்கு அப்பாலுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50-60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதால், அப்பகுதிகளிலுள்ள கடலும் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே, குறித்த கடற்பிரதேசங்களில் நிலவும் பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பான நிலைமை குறித்து அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *