கொங்கோவில் வேகமாக பரவும் எபோலா வைரஸ் : 1,556 பேர் பலி!

கொங்கோவில் எபோலா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,556 ஆக அதிகரித்துள்ளது.

மத்திய கிழக்கு ஆபிரிக்காவில் அமைந்துள்ள நாடு கொங்கோ. இந்நாட்டில் எபோலா வைரஸ் நோய் வேகமாக பரவி வருகிறது. எபோலா உலகிலேயே மிகக்கொடிய வைரஸ் நோய்களில் ஒன்றாகும்.

இந்நிலையில் 3,532 பேருக்கு எபோலா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. மேலும், எபோலா வைரஸ் பாதிப்பால் 1,556 பேர் உயிரிழந்துள்ளதாக கொங்கோ சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொங்கோவில் எபோலா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் ,வைரசை கட்டுப்படுத்த முடியாமல் அந்நாட்டு சுகாதாரத்துறை திணறி வருகிறது.


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *