நிலக்கரி சுரங்கத்தில் வெடி விபத்து – 34 பேர் பலி…

பாகிஸ்தான் நாட்டின் பலூசிஸ்தான் மாகாணம் குவாட்டா பகுதியில் நிலக்கரி சுரங்கம் உள்ளது. இந்த நிலக்கரி சுரங்கத்தில் நேற்று 40க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நிலக்கரி வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது திடீரென சுரங்கத்தில் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் நிலக்கரி சுரங்கத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதனால், தொழிலாளர்கள் அனைவரும் சுரங்கத்திற்குள் சிக்கிக்கொண்டனர்.

இந்த சம்பவம் குறித்து அறிந்த மீட்புக்குழுவினர் விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர். ஆனாலும், இந்த சுரங்க வெடி விபத்தில் சிக்கி 34 பேர் உயிரிழந்தனர், மேலும், 10க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதால் அவர்களை மீட்கும் பணியில் மீட்புக்குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

 

 

 


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *