முன்னாள் காதலிக்கு 860 கோடி சொத்து எழுதிய எப்ஸ்டீன்!

அமெரிக்க பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein) தனது உயிலில், அவரது கடைசி காதலியான கரினா ஷூலியாக் என்ற பல் மருத்துவருக்கு 100 மில்லியன் டாலர் மதிப்பிலான சொத்துக்களை எழுதி வைத்துள்ளதாக புதிய ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது.அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட எப்ஸ்டீனின் வழக்குப் பதிவுகள் மற்றும் உயில் ஆவணங்கள் (Epstein Files) மூலம் இந்த விபரங்கள் அம்பலமாகியுள்ளன.

சொத்துக்களுடன் சேர்த்து, திருமண ஒப்பந்தத்தின் அடையாளமாக 33 காரட் வைர மோதிரம் ஒன்றையும் கரினாவுக்கு எப்ஸ்டீன் வழங்கியுள்ளார்.

பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த கரினா, 2010 இல் மாணவர் விசா மூலம் அமெரிக்கா வந்தார். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பல் மருத்துவம் படிக்க எப்ஸ்டீன் இவருக்கு முழு நிதியுதவி செய்துள்ளார்.

2019 ஆகஸ்ட் 10 அன்று நியூயார்க் சிறையில் எப்ஸ்டீன் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு, அவர் கடைசியாகப் பேசிய நபர் கரினா ஆவார்.

எப்ஸ்டீனின் மொத்த சொத்துக்களில் பெரும்பகுதி பாதிக்கப்பட்ட பெண்களுக்கான இழப்பீடுகள், வரிகள் மற்றும் நீதிமன்றச் செலவுகளுக்குப் பயன்படுத்தப்பட்டுவிட்டது. தற்போது எஞ்சியுள்ள சுமார் 127 மில்லியன் டாலர் சொத்தில் இருந்து கரினாவுக்கு இந்தத் தொகை கிடைக்க வாய்ப்புள்ளது


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *