அமெரிக்க படைகள் மீது ஈரான் திடீர் ஏவுகணைத் தாக்குதல்

மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவப் படைகளைக் குறிவைத்து ஈரான் நடத்திய பாலிஸ்டிக் ஏவுகணைகள் வெற்றிகரமாக தடுத்து நிறுத்தப்பட்டதாக, அமெரிக்க மத்தியப்படை தலைமையகம் தெரிவித்துள்ளது.

ஈரான் போர் குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. முன்னதாக வெள்ளை மாளிகை வந்த நெதன்யாகுவை டிரம்ப் வரவேற்றார். இந்த சந்திப்பு நடந்த சில மணி நேரத்தில் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவப் படைகளைக் குறிவைத்து ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.

சில தினங்களுக்கு முன் ஈரான் மீதான திட்டமிடப்பட்ட ராணுவத் தாக்குதல்களை அமெரிக்க அதிபர் டிரம்ப் இடைநிறுத்திய பின்னர், இப்பகுதியில் உள்ள ஒரு அமெரிக்க ராணுவத் தளம் மீது ஈரான் நடத்திய முதல் நேரடித் தாக்குதல் இதுவாகும். இது குறித்து அமெரிக்க மத்தியப்படை தலைமையகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கப் படைகள் மீது திடீர் தாக்குதல் நடத்தும் முயற்சியாக, இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையினர் ஈரானிலிருந்து பல பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவினர். ஈரானின் அனைத்து ஏவுகணைகளும் வெற்றிகரமாக இடைமறிக்கப்பட்டன. அமெரிக்கப் படைகள் விழிப்புடனும், தயார் நிலையிலும் உள்ளன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டது.


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *