தென்சீனக் கடலில் மீண்டும் சீனா–பிலிப்பைன்ஸ் மோதல்

தென்சீனக் கடலில் உரிமைக் கோரிக்கையை மையமாகக் கொண்டு சீனா மற்றும் பிலிப்பைன்ஸ் இடையிலான பதற்றம் மீண்டும் தீவிரமடைந்துள்ளது.

ஸ்கார்பரோ ஷோல் பகுதியில் பிலிப்பைன்ஸ் அரசுக் கப்பல்களும் மீனவர் படகுகளும் பயணித்துக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த சீன கடலோர பொலிஸ்படை கப்பல்கள், இரண்டாவது நாளாகவும் ‘வொட்டர் கேனான்’ மூலம் தண்ணீரைப் பீய்ச்சியடித்து அவற்றைத் தடுக்க முயன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, சீனக் கப்பல் ஒன்று பிலிப்பைன்ஸ் படகிற்கு மிக அருகில் சென்று மோதும் அபாயத்தையும் ஏற்படுத்தியதாக கூறப்படுகின்றது.

இந்த வாரத்தில் மட்டும் இரு நாடுகளுக்கும் இடையே பதிவான மூன்றாவது மோதல் இதுவாகும்.

பிலிப்பைன்ஸ் கப்பல்கள் சட்டவிரோதமாக தமது கடற்பரப்புக்குள் நுழைந்ததாக சீனா குற்றஞ்சாட்டியுள்ள நிலையில், தேவையற்ற கோபமூட்டும் நடவடிக்கைகளில் சீனா ஈடுபடுவதாக பிலிப்பைன்ஸ் பதிலளித்துள்ளது.

இதனால், தென்சீனக் கடல் பகுதியில் இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *