பிரிட்டனின் அனல்காற்றால் மக்களும் பொருளாதாரமும் பாதிப்பு

பிரிட்டனில் அண்மையில் ஏற்பட்ட கடுமையான அனல்காற்று காரணமாக மக்களின் ஆரோக்கியம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அந்நாட்டுப் பொருளாதாரத்திற்கு £1.15 பில்லியன் (சுமார் 1.5 பில்லியன் டாலர்) வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகப் புதிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

1884 ஆம் ஆண்டிற்குப் பிறகு பிரிட்டன் சந்தித்த மிக வெப்பமான ஜூன் மாதமாக இது பதிவாகியுள்ளது.

சுமார் 87% தொழிலாளர்கள் தூக்கமின்மை, தலைச்சுற்றல், மயக்கம் மற்றும் அதீத சோர்வு போன்ற உடல்நலப் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர். இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகளில் மட்டும் இந்த வெப்ப அலையினால் சுமார் 2,700 கூடுதல் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.பெண்கள், 35 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் மற்றும் ஏற்கனவே உடல்நலக் குறைபாடு உள்ளவர்கள் இதனால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடுமையான வெப்பம் காரணமாக பிரிட்டன் முழுவதும் தொழிலாளர்கள் தங்களின் வேலை நேரத்தைக் குறைத்துக் கொண்டதால், ஒட்டுமொத்தமாக 24 மில்லியன் வேலை நேரங்கள் வீணாகின.

கடும் வெப்பத்தைச் சமாளிக்க பிரிட்டன் இன்னமும் தயாராக இல்லை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

பருவநிலை மாற்றத்தால் வெப்பத்தாக்கம் மோசமாகிறது. அரசாங்கம் கூடுதல் முயற்சிகளை எடுக்க வேண்டும் என்றும் ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

வெப்பநிலை அதிகரிப்பதால் சுகாதாரம் மட்டுமின்றி வேலைகள், உற்பத்தி, பொருளாதாரம் போன்றவை எவ்வாறு பாதிக்கப்படுகின்றன என்பதை ஆய்வு ஆராய்கிறது.


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *