ஈரானில் திடீரென மோசமான நிலைமை: இந்தியர்களிற்கு எச்சரிக்கை

ஈரான் – அமெரிக்கா இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் இந்திய மத்திய அரசு இந்திய மக்களுக்கு இன்று முக்கிய அறிவுரையை வழங்கி உள்ளது.

இந்தியர்கள் யாரும் ஈரானுக்கு செல்ல வேண்டாம். ஈரானில் இருக்கும் இந்தியர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று அவசர வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில் அதன் பின்னணி குறித்த பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. ஈரான் – அமெரிக்கா இடையே தற்போது நாளுக்கு நாள் மோதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கடந்த சில நாட்களாக தினமும் அதிகாலையில் ஈரானை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடியாக ஈரானும்,பதில் தாக்குதல் நடாத்தி வருகிறது.

இந்தப்போர் காரணமாக அமெரிக்காவுடன், மீண்டும் இஸ்ரேல் கைகோர்க்கலாம் என்று வெளிநாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன. இதனால் மத்திய கிழக்கு பிராந்தியம் மீண்டும் பதற்றமாகி உள்ளது. இந்நிலையில் தான் ஈரானில் உள்ள இந்திய தூதரகம் தன் நாட்டின் மக்களுக்கு வேண்டுகோளுடன் கூடிய முக்கிய அறிவுரைகளை வழங்கி இருக்கிறது.

இதுதொடர்பாக ஈரானில் உள்ள இந்திய தூதரகம் இன்று தனது எக்ஸ் பக்கத்தில் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், ”சமீப நாட்களாக ஈரான் முழுவதும் வன்முறை மற்றும் நிலையற்ற தன்மை அதிகரித்து கொ்டே உள்ளது. இதனால் ஈரான் வர திட்டமிட்டுள்ள இந்தியர்கள் அந்த பயணத்தை தள்ளிவைக்க வேண்டும்.

பாதுகாப்பு நிலை சுமூகமாகும் வரை ஈரானுக்கு பயணிப்பதை தவிர்க்க வேண்டும்.  அதேபோல் ஈரானில் ஏற்கனவே உள்ள மக்கள் தற்காலிகமாக அங்கிருந்து பாதுகாப்பு காரணங்களுக்காக  வெளியேற வேண்டும். ஈரானிலேயே தொடர்ந்து இருக்கத் தீர்மானித்து இருப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். உள்ளூர் செய்திகளை உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.

உள்ளூர் அதிகாரிகளின் அறிவுரைகளை முறையாக பின்பற்ற வேண்டும். குறிப்பாக நாட்டின் தெற்கு கடற்கரை பகுதிகளில் ராணுவ நடவடிக்கைகள் தீவிரமாக உள்ளதால் அதனை தவிர்க்க வேண்டும். அதேபோல் ஈரானில் இருக்கும் இந்தியர்கள் அங்குள்ள தூதரகத்தில் பதிவு செய்யாமல் இருந்தால் உடனடியாக அதனை செய்ய வேண்டும். அதேபோல் அடிக்கடி இந்திய தூதரகத்தின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளம் மற்றும் இணையதள பக்கங்களை பார்த்து அடுத்தடுத்த தகவல்களை அறிந்து வைத்து கொள்ள வேண்டும்.” என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *