கெய்ர் ஸ்டாமர் பதவி விலகினார் – கடிதத்தை மன்னர் சார்ள்ஸ் ஏற்றுக்கொண்டார்!

பிரித்தானிய பிரதமர் பதவியிலிருந்து கெய்ர் ஸ்டார்மர் உத்தியோகபூர்வமாக விலகியுள்ளார்.

பக்கிங்ஹாம் அரண்மனையில் வைத்து உத்தியோகபூர்வமாக தமது பதவி விலகல் கடிதத்தை மன்னரிடம் கையளித்து, பிரதமர் பதவியிலிருந்து கெய்ர் ஸ்டார்மர் விலகியுள்ளார்.

இந்த நிலையில், அவரும் மன்னர் சார்லஸும் கைகுலுக்கும் படங்களும் வெளியாகியுள்ளன.

இது குறித்து பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நாடாளுமன்ற உறுப்பினர் கெய்ர் ஸ்டார்மர் இன்று காலை மன்னர் சார்லஸைச் சந்தித்து, பிரதமர் மற்றும் திறைசேரியின் முதல் பிரபு(First Lord of the Treasury) பதவிகளிலிருந்து விலகுவதற்கான கடிதத்தை சமர்ப்பித்தார்.

அதனை மன்னர் மூன்றாம் சார்ள்ஸ் ஏற்றுக்கொண்டார். திருமதி ஸ்டார்மரையும் மன்னர் சந்தித்திருந்தார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.