எப்போதுதான் எங்களுக்கு நீதி கிடைக்கும்??????செம்மணியில் எலும்புக்கூடுகளாக்கப்பட்டோர்

செம்மணியில் எம் உறவுகளுக்கு நடந்த அநியாயம்: திகிலூட்டும் மற்றொரு சாட்சி!

யாழ்.செம்மணி மனிதப் புதைகுழியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (19.07.2026) மூன்றாம் கட்டத்தின் 37 ஆம் நாள் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

இன்றைய அகழ்வுப் பணிகளின் போது குழியில் கால்கள் மடக்கி அமர்த்தி வைக்கப்பட்ட நிலையில் எலும்புக் கூட்டுத் தொகுதியொன்று மீட்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு இரண்டாம் கட்ட அகழாய்விலும் இதேபோன்று கால்கள் மடக்கப்பட்டு அமர்ந்த நிலையில் புதைக்கப்பட்டிருந்த ஒரு மனித எலும்புக் கூட்டுத் தொகுதியொன்று கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.

கொடூரமாகச் சித்திரவதை செய்யப்பட்டுப் படுகொலை செய்யப்படும் போது எமது உறவுகள் என்னவெல்லாம் நினைத்திருப்பார்கள்!

சுடலை என்று கூறுபவர்களே! இயற்கை எய்திய உடலங்களை இப்படியா புதைப்பார்கள்? இலங்கை அரச பயங்கரவாதத்தின் வெறியாட்டத்துக்கு இதனை விடவா வேறு சாட்சிகள் வேண்டும்?

முள்ளிவாய்க்காலில் மட்டும் இனப்படுகொலை நடக்கவில்லை. செம்மணியில் நடந்ததும் முற்று முழுதான தமிழினப் படுகொலையே என்பதற்கு உறுதியான சான்றுகள் ஒவ்வொன்றாய் வெளி வருகின்றன. சர்வதேச சமூகமே..சர்வதேச நீதி பெற்றுத் தர இனியும் வேண்டாம் தாமதம்!


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *