இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இடைநிறுத்தியது ஈரான்!

அமெரிக்கா தனது கடப்பாடுகளை மீறியதைத் தொடர்ந்து, இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் தான் மேற்கொண்டிருந்த அனைத்து கடப்பாடுகளையும் இடைநிறுத்தியுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது.

ஈரானின் வெளியுறவு பிரதி அமைச்சர் காசெம் கரிபாபாடி இதனை அறிவித்துள்ளதாக ஈரானின் பார்ஸ் (Fars)  செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கட்டமைப்பின் கீழ் அமெரிக்கா தனது அனைத்து கடப்பாடுகளையும் மீறி அவற்றைச் செயல்படுத்தாமல் நிறுத்தி வைத்துள்ளதாக காசெம் கரிபாபாடி குற்றம் சாட்டியுள்ளார்.

அமெரிக்காவின் தொடர்ச்சியான தாக்குதல் நடவடிக்கைகள் காரணமாகவே, இந்த ஒப்பந்தத்தின் கீழ் ஈரான் மேற்கொண்டிருந்த கடப்பாடுகள் மற்றும் ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துதல் ஆகியவற்றைத் தற்காலிகமாக இடைநிறுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

தற்போது நாடு தனது தற்காப்பு நடவடிக்கைகளில் முழுமையாக ஈடுபட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *