40 நாடுகளுக்கான விசா கட்டணங்கள் தொடர்பில் அரசாங்கம் அதிரடி தீர்மானம்

40 நாடுகளுக்கான விசா கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் அறிவித்துள்ளார்.

நாட்டின் சுற்றுலாத் துறையை வளர்க்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.  2025ஆம் ஆண்டுக்கான ஹென்லி கடவுச்சீட்டு குறியீட்டில் இலங்கை 91ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

கடந்த ஆண்டு 96வது இடத்தில் இருந்த இலங்கை கடவுச்சீட்டு 5 இடங்கள் முன்னேற்றம் அடைந்துள்ளமை சிறம்பம்சமாகும்.

இவ்வாறானதொரு நிலையில், 40 நாடுகளுக்கான விசா கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளமையால் சுற்றுலாத்துறையை மேம்படுத்த முடியும் என அரசாங்கம் எதிர்பார்க்கின்றது.