2024 ஜனாதிபதி தேர்தல்: மாவட்ட ரீதியாக பதிவாகியுள்ள வாக்குகளின் வீதம் வெளியானது

2024, ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு, இன்று முற்பகல் 10 மணி நிலவரப்படி பெரும்பாலான மாவட்டங்களில் 20 வீதமாக பதிவாகியுள்ளதாக அந்தந்த மாவட்டங்களில் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி கொழும்பு 20 வீதம், களுத்துறை 32 வீதம், நுவரெலியா 25 வீதம், முல்லைத்தீவு 25 வீதம், வவுனியா 30 வீதம், இரத்தினபுரி 20 வீதம், மன்னார் 29 வீதம், கம்பஹா 25 வீதம், புத்தளம் 23 வீதம், பொலன்னறுவை 35 வீதம் என்ற அளவில் வாக்கு பதிவு இடம்பெற்றுள்ளது.