இந்தியாவின் ஒடிசா மாநிலம் கந்தமால் மாவட்டத்தில் பெண் ஒருவர் இரண்டு தலைகளுடன் கூடிய அரிதான குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்.
மருத்துவ ரீதியாக ‘டைசெபலஸ் பரபாகஸ்’ (Dicephalus parapagus) என அழைக்கப்படும் இத்தகைய பிறவி குறைபாடு, சுமார் 3 இலட்சத்தில் ஒருவருக்கு நிகழும் மிக அரிதான நிகழ்வாகும்.
கந்தமால் மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதியரின் முதல் குழந்தையான இது, 32 வார கர்ப்ப காலத்தில் அறுவை சிகிச்சை மூலம் கடந்த சனிக்கிழமையன்று (ஒக்டோபர் 10) பிறந்தது.
பிறப்பையடுத்து பெர்ஹாம்பூரில் உள்ள எம்.கே.சி.ஜி. மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் சிறப்பு குழந்தைகள் பராமரிப்புப் பிரிவில் (SNCU) அந்த சிசு அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
இரண்டு தலைகளும் கழுத்துகளும் ஒரே உடலில் இணைந்துள்ள அந்தக் குழந்தைக்கு, ஒரு ஜோடி கைகள், கால்கள் மற்றும் ஒற்றை சிறுநீர் பாதை ஆகியவை உள்ளன.
Leave a Reply